செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

செய்திச் சுருக்கம்

மழை

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது என்றும், அதன் காரணமாக 4 நாள்க ளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

முதலிடம்

அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் கிடைத்து உள்ளது.

திறப்பு

தொடர் கனமழை காரணமாக, சென்னை செம்பரம் பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறப்பு.

குறைக்க

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம்.வி.எஸ். சவுத்ரி தகவல்.

அபராதம்

வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சரிபார்க்க...

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களின் உண்மைச் சான்றுகளை, அந்தந்த மாவட்டங்களில் சரிபார்க்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.

சரிவு

நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த அக்டோபர் மாதத்தில் 4 சதவீதம் சரிந்தது என ஒன்றிய அரசின் தேசிய புள்ளியியல் துறை தகவல்.

கொள்கை

பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.


No comments:

Post a Comment