அகத்தை தூய்மைப்படுத்தும் கருஞ்சீரகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

அகத்தை தூய்மைப்படுத்தும் கருஞ்சீரகம்

சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத் தப்பட்டு வரும் மிகப் பழை மையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட் ரேட் 24.9%, புரதம் 26.7%, கொழுப்பு 28.5% உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள ‘தைமோகுயி னோன்’ என்ற தாவர வேதிப் பொருள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதி லும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிக ளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து. இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமைய லுக்கு பயன்படுத்தும் மசாலா வில் சேர்த்தும் பயன்படுத்த லாம். கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பி ணிகள் பயன்படுத்தக் கூடாது. குருதி அழுத்தத் திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது குருதி அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் மருந்து’ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


No comments:

Post a Comment