பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வு விருப்ப மொழியாக தமிழை தேர்வு செய்யலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வு விருப்ப மொழியாக தமிழை தேர்வு செய்யலாம்

அய்.அய்.டி., என்.அய்.டி போன்ற முன் னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜே.இ.இ தேர்வு கள் நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்:

தமிழ்நாடு மாநில பாடத்தில் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள் ஜே.இ.இ தேர் வுக்கு விண்ணப்பிக்கும்போது வினாத்தாள் விருப்ப மொழியாக பெரும்பாலானோர் ஆங்கிலத்தை தேர்வு செய்கிறார்கள்.  இதை தவிர்த்து தமிழை விருப்ப மொழியாக தேர்வு செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்படும். இது சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் உள்ள கேள்வி குழப்பம் ஏற்படுத்தும்போது, தமிழில் படித்தால் எளிதில் புரிந்துக் கொள்ள உதவும்.

ஜே.இ.இ தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறும் இராஜஸ்தான், குஜராத் மாண வர்கள் தங்கள் தாய்மொழிகளையே விருப்ப மொழியாக தேர்வு செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதிகமானோர் ஆங்கிலத்தை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். ஆனால் தமிழில் தேர்வு செய்யும்போது இரண்டு மொழிகளிலும் கேள்விகள் வழங்கப்படு வதால், கூடுதல் நன்மையாக இருக்கும். உங்களுக்கு புரியாத கேள்விகளுக்கு தமிழில் படித்து புரிந்துக் கொள்வது நன்றாக இருக்கும் என்பதால், தமிழை விருப்ப மொழியாக தேர்வு செய்யலாம்.

No comments:

Post a Comment