இனமான பேராசிரியர் தாத்தா அன்பழகனார் அவர்கள் திராவிடக் கருவூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

இனமான பேராசிரியர் தாத்தா அன்பழகனார் அவர்கள் திராவிடக் கருவூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஆவடி, டிச. 18- திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி மாநகர திமுக சார்பில், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு நிறைவு விழா  பொதுக்கூட்டம் 16.12.2022 அன்று மாலை நடை பெற்றது. இந்த கூட்டத்துக்கு பால் வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் கலந்துகொண்டு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதா வது;

எத்தனையோ பதவிகள், பொறுப்புகள் வரலாம், போகலாம். ஆனால், தங்களின் செல்லப் பிள் ளையாகத்தான் நானிருப்பேன். தற்போது அமைச்சராக இருப்ப தால், இருக்கும் பணிகளை சரியாக செய்யவேண்டிய கடமை உள்ளது. இனமான பேராசிரியர் தாத்தா வின் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு முழுவதிலும் கொண் டாடப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இளைஞரணி உறுப்பி னர்கள், அமைச்சர் சா.மு.நாசரை பின்பற்றி, கட்சியில் எப்படி பணி யாற்ற வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். தனது பெய ருக்கு முன்னால் ஊர் பெயரை சேர்த்துக்கொள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஆவடியை தனது பெயருக்கு முன்னால் வைத் துக்கொள்ளும் தகுதி அமைச்சர் ஆவடி நாசருக்கு உண்டு.

பேராசிரியர் தாத்தா அன்பழ கனார், திராவிடத்தின் கருவூலம். எனது திருமணமும் பேராசிரியர் தலைமையில்தான் நடைபெற்றது. கலைஞரும் பேராசிரியரும் நெருக் கமாக பழகியுள்ளனர். 

முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தான் திமுகவை வழிநடத்த போகிறார் என கலைஞர் இருக்கும்போதே கூறியவர் பேராசிரியர். தி.மு.கழகத் தின் கறுப்பு, சிவப்பு கொடியை போல்தான் நானும் பேராசிரியரும் என்று ஏற்கெனவே முத்தமிழறிஞர் கலைஞர் பெருமையுடன் கூறி யுள்ளார்.

நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் வாங்குவது பெரிதல்ல. நம்பர் 1 தமிழ்நாடு என்று பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். இந்தியா டுடே பத்திரிகையில் வெளியிட்ட மாநில தரவரிசை பட்டியலில், தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல் மகிழ்ச் சியை ஏற்படுத்தியது. -இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment