மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு இரண்டாமிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு இரண்டாமிடம்

திருச்சி, டிச. 18- இந்திய மருந்தியல் கழகத்தின்  (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சு போட்டியின் மாநில சுற்று  “Pharmacy United in Action for a Healthier World”என்ற தலைப்பில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. 

இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி எம். மஞ்சு சிறீ கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பரிசு பெற்ற மாணவிக்கு முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 


No comments:

Post a Comment