அமீரகம் நிலவுக்கு அனுப்பிய ரஷீத் ரோவருக்கான முக்கிய கட்டமைப்பு பகுதிகள், சென்னையில் தயாரானவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

அமீரகம் நிலவுக்கு அனுப்பிய ரஷீத் ரோவருக்கான முக்கிய கட்டமைப்பு பகுதிகள், சென்னையில் தயாரானவை!

சென்னை, டிச. 18- அய்க் கிய அரபு அமீரக அரசு, வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பிய முதலாவது செயற்கைக்கோள் ரஷீத் ரோவருக்கான கட்ட மைப்பு பகுதிகளை சென் னையைச் சேர்ந்த எஸ்.டி. அட்வான்ஸ்ட் கம்போ சைட்ஸ் நிறுவனம் தயா ரித்து சாதனை புரிந்துள்ளது. 

ஜப்பானின் ஹகுடோ-ஆர் உதவியுடன் அமெ ரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ்-எக்ஸ் ஃபால்கன் விண்வெளி ஓடம் மூலம் டிசம்பர் 11-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. 

ரஷீத் ரோவரில் பயன் படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மையான பாகங்கள், சென்னையில் இயங்கி வரும் நடுத்தர தொழில் நிறுவனமான எஸ்.டி. அட்வான்ஸ்ட் கம்போசைட்ஸ் (ஷிஜிகிசி) நிறுவனம் இரண்டு ஆண்டுகள் கடுமையாக மேற்கொண்ட முயற்சிக ளால் உருவானது என் பது குறிப்பிடத்தக்கது. 

ரஷீத் ரோவர் விண் வெளி கலம் திட்டத் தயா ரிப்பில் நிறுவனத்தின் நிபுணத்துவம் குறித்து எஸ்.டி.ஏ.சி. இயக்குநர் டாக்டர் தேவேந்திரன் திருநாவுக்கரசு கூறுகை யில், “இதில் பயன்படுத் தப்பட்டுள்ள பாகங்கள் அனைத்தும் மெட்டா லிக் மற்றும் கார்பன் ஃபைபரால் ஆனவை. இவை பெரும்பாலும் விமானத்துறை மற்றும் ராணுவ தளவாட உற் பத்தியில் பயன்படுத்தப் படுவதாகும். ஏற்கெனவே இஸ்ரோ மற்றும் டி.ஆர். டி.ஓ. (மிஷிஸிளி ணீஸீபீ ஞிஸிஞிளி) ஆகியவற்றின் திட்டப் பணிகளில் பணியாற்றிய அனுபவம் எங்களுக்குள் ளது. இது தவிர பன்னாட்டு விண்வெளி தொழில் நுட்ப நிறுவனங்களான, குறிப்பாக இங்கிலாந்து நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட்டுள்ளோம். ரஷீத் ரோவருக்குத் தேவை யான கட்டமைப்பு பாகங் கள் உருவாக்கமானது இத்திட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்றாகும். 

No comments:

Post a Comment