குத்தாலத்தில் சுயமரியாதை நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

குத்தாலத்தில் சுயமரியாதை நாள் விழா

குத்தாலம், டிச. 18- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. 

2.12.2022 மாலை 6 மணி அளவில் கடைவீதியில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கல் யாணம் தலைமையில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

ஒன்றிய தலைவர் ச.முரு கையன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன் றத் தலைவர் கொக்கூர் கவிதா சின்னகுமார் வரவேற்புரை ஆற்றினார். கொக்கூர் பெரியார் பெருந்தொண்டர் ச.கோவிந்தசமி, கண்டியூர் பெரியார் பெருந்தொண்டர் ச.கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செகதீசன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலா ளர் சாமிதுரை, பூ.சி.கமாராஜ், பகுத்தறிவாளர் கழக தலைவர் அண்ணாதாசன், குத்தாலம் ஒன்றிய துணைச் செயலாளர் டி.சபாபதி, திமுக குத்தாலம் வடக்கு செயலாளர் குமார. வைத்தியநாயன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராம.ராஜேந்திரன், நகர கழக செயலாளர் எம்.சம்சுதீன், மதி முக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் சுயமரியாதை வீரர் பி.கல்யாணம், தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றி சிறப்புரையாற்றினார். குத்தாலம் ஒன்றிய துணைத் தலைவர் எம்.பால சுந்தரம், ஏ.முத்தையன், ஜான்சன், கார்த்திகேயன், மணிமாறன், செல்வமணி மற்றும் அனைத் துக் கட்சி தோழர்கள், திமுக நகர நிர்வாகிகள், மதிமுக நகர நிர்வாகிகள், பொதுமக்கள் திர ளாக கலந்து கொண்டார்கள். 

இறுதியில் குத்தாலம் ஒன் றிய செயலாளர் கு.இளமாறன் நன்றி கூறினார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

No comments:

Post a Comment