ஜாதி சான்றிதழ் உள்பட அனைத்து சான்றிதழ்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

ஜாதி சான்றிதழ் உள்பட அனைத்து சான்றிதழ்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை, டிச. 27, ஜாதிச் சான்றிதழ் உள்பட அனைத்து நிலுவையிலுள்ள சான்றி தழ்களையும் அடுத்த ஒரு மாதத் திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத் தினார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச் சரின் தகவல் பலகை  (Dash board) தரவுகளின் அடிப் படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண் டார்.

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்ட-- முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், நிலு வையிலுள்ள சான்றி தழ்களை அடுத்த ஒருமாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விவரங்கள் குறித்து தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதலில் தாமதங்கள் காணப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அலுவலர் களுக்கு இதுகுறித்து தக்க அறிவுரைகள் வழங்கப் பட்டு, பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இந்த சேவை வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத் தினார். 

அதே போன்று, நகராட்சி நிர்வாகத் துறையின் பணிகளும் தகவல் பலகை தரவுகள் மூலம் ஆய்வு செய்யப் பட்டு, வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும் என்றும், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல மைச்சர் அறிவுறுத்தினார். 

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணி கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

போக்கு வரத்துத் துறையில் போதுமான எண்ணிக்கையில் பேருந்து சேவைகள் நிர்ணயிக் கப்பட்ட அளவுக்கு குறையா மல் போதுமான அளவு இயக்கப்பட வேண்டும் என் றும், குறைவாக பேருந்து சேவைகள் இயக்கப் பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை உடனடி யாக களையவேண்டும் என் றும், பேருந்து நிலையங் களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங் கிட  உரிய  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதல மைச்சர் அறிவுறுத் தினார்.

அடுத்தபடியாக, மாநிலத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

 நிலுவை வழக்குகள் விரைவில் முடிவுக்கு கொண் டுவரப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் நவீன முறைகளில் மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் முதல மைச்சர் அறிவுரை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment