திண்டுக்கல், டிச. 27, பழனிக்கு நடைப்பயணம் சென்றபோது, கூட்டத்துக்குள் கார் புகுந்து 2 பெண்கள் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பழனி முருகன் கோவி லில் தைப் பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களை முன் னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிக ளில் இருந்து கோவிலுக்கு நடைப் பயண மாக வருவது வழக்கம்.
இந்தநிலையில் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி செல்வி (வயது 48), அதே பகுதியை சேர்ந்தவர் களுடன் பழனிக்கு 2 நாட்க ளுக்கு முன்பு புறப்பட்டார்.
அந்தக் குழுவினர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு வந்தனர். இரவில் அங்கே தங்கி விட்டு, ஒட்டன்சத்தி ரத்தில் இருந்து பழனி நோக்கி மீண்டும் நடந்தனர்.
அப்போது செல்வியுடன் வந்த வர்கள் முன்னால் சென்று விட் டனர். இதனால் செல்வி கரூர் மாவட்டம் ஒட்டப்பட்டியை சேர்ந்தவர்கள் குழுவினர்களுடன் சேர்ந்து செல்வி நடந்து சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல், -பழனி சாலையில் அதி காலை 4 மணி அளவில், சத்திரப்பட் டியை அடுத்த வீரலப்பட்டி பிரிவு பகுதி யில் செல்வி மற்றும் கரூர் ஒட் டப் பட்டியை சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் பழனி நோக்கி வந்த கார் ஒன்று ஓட்டு நரின் கட்டுப் பாட்டை இழந்து கூட்டத்துக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் செல்வி நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாப மாக இறந்தார். அவருடன் வந்த கரூர் ஒட்டப்பட்டியை சேர்ந்த கண்ணுசாமி மனைவி கருத்தா (50), ராமன் (40), கன்னியம் மாள் (50), சிறீரங்கன் (50), சந்திரா (35), போதும்பொண்ணு (31) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந் தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப் பட்டி காவல்துறை நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்ட னர். விபத்தில் காயம டைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத் தனர்.
மேலும் செல்வியின் உடலை உடற்கூராய்வுக்காக ஒட்டன் சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற் கிடையே படுகாயமடைந்த கருத்தா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார்.
விபத்தை ஏற்படுத்திய காரில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சபரிமலைக் குழுவினர் வந்தனர். அவர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு, பழனிக்கு காரில் வந்து கொண்டி ருந்தனர்.
காரை அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (35) என்பவர் ஓட்டி னார். வீரலப்பட்டி பிரிவு பகுதியில் அவர்கள் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார், பழனிக்கு நடைப் பயணமாக சென்ற பக்தர்கள் மீது மோதியது தெரியவந்தது.
இதையடுத்து கார் ஓட்டுநர் தேவேந்திரனை காவல்துறைனர் கைது செய்தனர். கார் மோதியதில், பழனிக்கு நடைப் பயணமாகச் சென்ற 2 பெண்கள் பலியான நிகழ்வு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment