திருவனந்தபுரம், டிச. 27, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 29 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடைவழி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் வழிபாட்டிற்கு கூட்டமாக வருகிறார்கள். இதனால் கூட்டம் சபரிமலையில் அலை மோதியது. இந்தநிலையில் சீசனின் நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (27.12.2022) நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலை அய்யப்பன் சிலைக்கு தங்க அங்கி அணி வித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவி தாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளதாம். இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானதாம். இதுவரை 29,08,500 பக்தர்கள் வருகை தந்துள்ளார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment