குனிந்தவர்களுக்கு எல்லாம்
கடவுள் பக்தி இருக்குதய்யா!
தலை நிமிர்ந்தவர்களுக்கு
நீங்களே முதல் வழிகாட்டி அய்யா!
இந்தியாவை கண்டுபிடித்தவர்
வாஸ் கோடகாமா!
அமெரிக்காவை கண்டுபிடித்தவர்
கிறுஸ்டோபர் கொலம்பஸ்!
ஆனால் மனிதர்களை
கண்டுபிடித்தவர்
நீங்கள் தான் அய்யா!
அதுவரை கீழினும் கீழான
உணர்ச்சியற்ற அடிமைகள்!
உங்களின் சமூகநீதி போராட்டத்தால்
இன்று படித்த சமூக பிரஜைகள்!
சுயமரியாதை உள்ளவர்கள்
நன்றியோடு உங்களை
நினைத்துப் பார்க்கிறார்கள்!
அடுத்தத் தலைமுறைக்கும்
சொல்லி கொடுக்கிறார்கள்!
காலகாலத்திற்கும்
நீங்கள் தேவைப்படுவதால்,
உங்களுக்கு மரணம் என்பது
இல்லவே இல்லை அய்யா!
- விஜய் (பெங்களூர்)
No comments:
Post a Comment