மதவெறி சக்திகளை முறியடித்து மதச்சார்பற்ற அரசு அமைய போராட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

மதவெறி சக்திகளை முறியடித்து மதச்சார்பற்ற அரசு அமைய போராட வேண்டும்

பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

சென்னை, டிச.28- “மதவெறி சக்தி களை எதிர்த்திட, பாசிச ஆட்சியை விரட்டிட நமது போராட்டம்  தொடரும்” என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தமது 98ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசும்போது உறுதிபடக் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமது பிறந்தநாள் விழாவில் நன்றி தெரிவித்து பேசியதாவது: 

நம்முடைய மாநில முதலமைச்சர் அவர்கள் நேரடியாக வந்து, எனக்கு வாழ்த்துகளைச் சொல்லி பாராட் டுத் தெரிவித்துள்ளார். முதல மைச்சர் அவர்களின் நடவடிக்கை களில் இந்த ஓராண்டில் புதிய நோக்கத்தையும் புதிய கருத்துக் களையும் இன்றைக்கு நாட்டில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி களை பாதுகாப்பதற்கும் மதச்சார் பற்ற கொள்கைகளை நிலைநிறுத்து வதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய மரியாதைக்குரிய முதல மைச்சர் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். அவர்களுக்கும் என் வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கி றேன். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இங்கே வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு போராட் டங்களில் துணிந்து செயல்பட்டு இந்திய நாட்டினுடைய மக் களுக்காக மாத்திரமல்ல, இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்ற நோக் கத்தையும் இறுதிவரை போராடி அதற்கான பல வெற்றிகளை கண்ட மரியாதைக்குரிய வைகோ அவர்கள் இங்கே வாழ்த்துத் தெரிவித்திருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த கோபண்ணா அவர்கள் நேரு அவர்களுடைய வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில் எழுதி அதை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் கோபண்ணா அவர்கள் எழுதிய நூலைப் பற்றி பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கிறோம். கோபண்ணா அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள் மற்றும் தோழர்கள் அனைவரையும் நான் நேரில் பார்த்து அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அந்த முறையில் வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

சுதந்திரம் பெற பல்வேறு போராட்டங்கள்!

இன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 77ஆவது ஆண்டு முடிந்து துவக்க நாளை கொண் டாடக்கூடிய வகையிலும், ஏற்கெ னவே இந்திய நாட்டில் நம்முடைய கட்சியை வளர்த்த நாடாளுமன்றத் தலைவர்கள் மாத்திரமல்ல; மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு இந்த வாய்ப் பளித்த அனைவருக்கும் நன் றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே ஒன்றிரண்டு விஷயத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். கம்யூனிஸ்ட் கட்சி இத்தனை ஆண் டுகள் சுதந்திரம் பெறுவதற்கான பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. அதுபற்றி இங்கே முத்தரசன் அவர்கள் பல விப ரங்களை சொல்லிவிட்டார்கள். அதில் நான் மீண்டும் ஒரு சில விஷ யங்களை சொல்ல விரும்புகிறேன். இந்த நாடு சுதந்திரம் பெறவேண்டும் சுதந்திரம் என்றால் என்ன? அந்த சுதந்திரம் எப்பேர்ப்பட்ட சுதந்திர மாக இருக்க வேண்டும். மாநில கூட்டாட்சியாக இருக்கலாமா ? இல்லையென்றால் பிரிட்டிஷ் ஏகா திபத்தியத்தை எதிர்த்து போராடு வதில் உறுதியாக போராட வேண்டுமா? என்று சொல்லப் பட்டபோது ‘பரிபூரண சுதந்திரம் வேண்டும்’என்ற கருத்தை முதலில் வெளிப்படுத்திய பெருமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு என் பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் சொன்னவர் சிங்காரவேலர்!

அதைப் பற்றி 1921 ஆம் ஆண்டி லிருந்து 1930 வரை காங்கிரஸ் கட்சி மாநாடுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒவ்வொரு மாநில மாநாட்டிலும் அதில் கலந்து கொண்டிருக்கும்போது எப்படி சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் பரிபூரண சுதந்திரம் வேண்டும் என முதலில் சொன்ன பெருமைக்குரி யவர் சிங்காரவேலர். திரு.வி.க.வும் மற்றவர்களும் சேர்ந்து போராடி அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அதை காங் கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடைசியாக 1927இல் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நேரு அவர்கள் கலந்துகொண் டார்கள். அந்த  மாநாட்டிலும் என்ன சுதந்திரம் எப்படி வேண்டும் என்பதைப் பற்றி சொன்ன கம்யூ னிஸ்ட் இயக்கத்தோடு நேருவும் இருந்தார். அப்போது நேரு அவர்கள் எல்லோரையும் அழைத்து சிங்காரவேலர், திரு.வி.க. போன்ற வர்களை கூட்டி வைத்து நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை காங் கிரசில் உள்ளவர்கள் முழுமையாக ஒத்துக் கொள்ளவில்லை; அந்தத் தீர்மானத்தை - நானே கொண்டு வருகிறேன். நீங்களும் ஆதரியுங்கள். அந்த தீர்மானத்தை நானே தயா ரித்து வருகிறேன். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் என்று நேரு அவர்கள் சொல்லி அந்த மாநாடு  நம்முடைய சென்னையில்தான் நடந்தது. அந்த மாநாட் டில்தான் அவர் சொல்ல, மற்ற வர்கள் எல்லாம் சேர்ந்து அதை ஆதரித்து அந்தத் தீர்மானம் ஒத்துக் கொள்ளப்பட்டது. அதற்கு பிறகும் அதை நிறைவேற்றவில்லை. ஆனா லும் அந்தத் தீர்மானத்தை 7வருடம் கழித்து ஒத்துக் கொண்டார்கள். அந்த பெருமை நேரு அவர்கள் கொண்டு வந்ததால் கிடைத்தது. அதனால்தான் இன்றைக்கு நேரு பார்க் என்று இப்போது இருக்கிறது. அந்த நேரு பார்க் என்பதை அவர் பெயரால் அந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று அதன் நினை வாகத்தான் முடிவு செய்யப்பட்டது. அந்த வரலாற்று நிகழ்ச்சியை இந் திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்து வைத்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். 

அதையெல்லாம் சேர்த்துதான் 1930 ஜனவரி மாதம் 30ஆம் தேதி கொண்டு வந்த அந்தத் தீர்மானத் தில்தான் சுதந்திர தினமும் குடியரசு தினமும் எப்போது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வளவையும் நான் சொல்வதற்கு காரணம், இந்தி யாவிற்கு முழு சுதந்திரம் வேண்டும். பூரண சுதந்திரம் வேண்டும். குடி யானவனுக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொதுத்துறை ஆக்கப்பட வேண்டும் என்ற நிலையை அந்த தீர்மானத்தில்தான் நிறைவேற்றப்பட்டன. அதுதான் இன்றுவரை அரசியல் சாசனத் திற்கும் காரணமாக இருக்கிறது. ஆகவே இன்றைக்கு நாம் அனை வரும் கலந்துகொண்டிருப்பது கம் யூனிஸ்ட் கட்சிக்காக மட்டுமல்ல; இந்த நாட்டை பாதுகாக்க வேண் டும். போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துதான் மதச் சார்பற்ற கொள்கையை அடிப் படையாக வைத்து அதிலும் அம் பேத்கர், நேரு போன்றவர்களும் மற்றவர்களும் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கிறது. அம்பேத்கர் சொல்லும்போது கூட இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்று விட் டோம். அது பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரம் பெற்ற நாட்டை பாதுகாக்க வேண்டு மானால் சமத்துவம், சகோதரத் துவம் என்ற இரண்டு கொள்கையும் நடைமுறையில் இருக்க வேண்டும். 

நாட்டை சீரழிக்கும் மதவெறி பா.ஜ.க.!

சுதந்திரம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, சமத்துவமும் இருக்க வேண்டும் - சகோதரத்துவமும் இருக்க வேண்டும். சுதந்திரம் இருக்க வேண்டும். ஆகவே சமத்துவமும், சகோதரத்துவமும் இல்லையென் றால் சுதந்திரத்தை பாதுகாக்க முடியாது என்று அம்பேத்கர் அந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டு சொன்னார். அதுதான் இன்றைக்கு நமக்கு சவாலாக இருக்கிறது. அன்றைக்கு பாடுபட்டு போராடிய சுதந்திரத்தை, முழு சுதந்திரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்தை முறியடிக்கக்கூடிய சுதந்தி ரத்தை நாம் போராடிப் பெற்றோம். அப்படி போராடிப் பெற்றதற்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மதச்சார்பை வைத் துக் கொண்டு - மதத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறது. அதை எதிர்த்து போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு இன் றைக்கு இந்த அணியாகச் சேர்ந்து இங்கே எப்படி இருக்கிறமோ அதைப் போல் இந்த நாட்டை பாதுகாப்பதற்கு மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது, ஒன்றியத்திலும் வந்து விடக்கூடாது ஒன்றிய அரசி னுடைய மதவெறி சக்திகளை முறி யடித்து மதச்சார்பற்ற அரசு மத்தி யில் இருக்க வேண்டும் என்ற முறை யில் நாம் போராட வேண்டும் என்ற உறுதிமொழியை, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து போராடி வந்ததைப் போல இப்போது அதை வெற்றி பெறுவதற்கு நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும் அந்த முறை யில் இங்கே கலந்து கொண்ட அனை வரும் அந்தக் கோரிக்கை நிறைவேற வும் லட்சியத்தை நிறைவேற்றவும் பாடுபட வேண்டும் என்று இங்கே கலந்து கொண்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு உரையாற்றினார்.

No comments:

Post a Comment