வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அமைச்சர் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அமைச்சர் விளக்கம்

சென்னை, டிச. 12, “மாண்டஸ் புயல் காரண மாக வண்டலூர் உயிரி யல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவித மான பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவற்றின் கூண்டுகளுக் கும் எந்த பாதிப்பும் ஏற் படவில்லை. மரங்கள், சுற்றுச்சுவர் விழுந்ததைத் தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை” என்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

மாண்டஸ் புயல் கார ணமாக வண்டலூர் உயி ரியல் பூங்காவில் 20-க்கு மேற்பட்ட மரங்கள் வே ரோடு சாய்ந்தன. உயி ரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. பூங்காவில் சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத் தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயல் கார ணமாக வண்டலூர் உயி ரியல் பூங்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,  “மாண்டஸ் புயலால் மரங்கள் விழுந்து மதில் சுவர் பாதிக்கப்பட்டுள்ள தாக எனக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக வந்து ஆய்வு மேற்கொண்டேன். பூங்காவில் உள்ள 7 பெரிய மரங்களும், சிறிய மரங்கள் பலவும் முறிந்து விழுந்துள்ளன. பூங்கா வின் அலுவலகத்தின் உள்ளே இருக்கும் சுற்றுச் சுவரில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. 

அதை உடனடி யாக சரி செய்ய அறிவு றுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் உடனடி யாக மேற்கொள்ளப்படும். வெகு வேகமாக முறிந்து விழுந்துள்ள மரங்கள் அப்புறப்படுத்தப்படும் என்று பூங்கா இயக்குநர் கூறியுள்ளார்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment