மதுரை, டிச.14- பள்ளி களில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலிலிருந்து 15 முதல் 20 மதிப்பெண்கள் வழங்கும் வினாக்கள் இடம் பெறும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது.
மதுரை ஒத்தக்கடை ராம்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப் பட்டுள்ளதாவது,
மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய, எவ்வித வாழ்க்கை வாழ வேண்டும் என வலியுறுத்தும் திருக் குறளை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு மானப் பாடப் பகுதி என்பதுடன் நிறுத்திவிடக்கூடாது. நன்னடத்தை தவறினால், புகழ் உச்சியில் இருந்தாலும், மனிதன் தாழ்ந்தவனா கிறான்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவரால் தொலைநோக்கு பார்வையுடன் உலக வாழ் வின் அத்தனை கூறுகளை யும் எடுத்துக்கூறும் குறட் பாக்களால் மட்டுமே, இச்ச முதாயத்தை சீர்படுத்த முடியும். விரிவாக திருக் குறள் கற்பிக்கப்படுமா னால், மாணவர்கள் சவால் களை எதிர்கொண்டு, தீர்வு களை தேடிக்கொள்வர். திருக்குறளில் இன்பத்துப் பாலை தவிர்த்து அறத்துப் பால், பொருட்பாலை உள்ளடக்கிய 108 அதிகா ரங்களையும், 2016_-2017 கல் வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை விரிவாக கற்பிக்கும் வகையில், பாடத் திட்டக் குழு மூலம், பாடத் திட் டத்தை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் 2016இல் உத்தரவிட்டது. இதன டிப்படையில் தமிழ்நாடு அரசு 2017இல் அரசாணை பிறப்பித்தது. இதை முறை யாக நடைமுறைப் படுத்த வில்லை. பாடப்புத்தகங் களில் பின் இணைப்பாக திருக்குறள் பெயரளவிற்கு இடம் பெற்றுள்ளது. அதற்கு தகுந்த விளக்கமோ, தேர்வில் வினாக்களோ இடம்பெறுவதில்லை. முறையாக கற்பிப்பதில்லை.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அறத்துப் பால், பொருட்பாலை உள்ளடக்கிய 108 அதிகா ரங்களுடன் திருக்குறள் சரியான விளக்கத்துடன் இடம் பெற வேண்டும். அதை ஆசிரியர்கள் முறை யாக கற்பிக்க வேண்டும். 108 அதிகாரங்களிலி ருந்து தேர்வில் வினாக்கள் இடம் பெற நடவடிக் கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
-இவ்வாறு ராம்குமார் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்னர் இவ்வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தரப்பில் குறிப்பிடு கையில்,
அறத்துப்பால், பொருட்பால் கொண்ட 108 அதிகாரங்களிலுள்ள குறளுக்கு விளக்கங்களு டன் புத்தகங்கள் அச்சிடும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. 2022-_2023 கல்வியாண்டிலிருந்து ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தேர்வுகளில் திருக்குற ளுக்கு 15 முதல் 20 மதிப் பெண் வழங்கும் வகையில் வினாக்கள் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டு ள்ளது.
இதை நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது. இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் 3 மாதங்க ளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
-இவ்வாறு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

No comments:
Post a Comment