ஜன.6இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

ஜன.6இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை,டிச.27- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத் தில் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதிமுதல் 22ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தென்னிந் திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகை யாளர் மன்றத்தில் நேற்று (26.12.2022) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

46ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதா னத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 6ஆம்தேதி மாலை 5.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுக ளையும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்குகிறார்.

பபாசி வழங்கும் சிறப்பு விருதுகள், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கவுள்ளார். விருது பெறுபவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் விழா வில் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் ஜனவரி 16ஆம் தேதி முதல் 18-ஆம்தேதி வரை 3 நாள்கள் அதே வளாகத்தில் சென்னை பன் னாட்டு புத்தகக் காட்சி நடைபெ றுகிறது. 

இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்கஉள்ளனர். இந்த புத்தகக் காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

புத்தகக் காட்சிக்கு 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. 3 நாள்கள் நடைபெறும் பன்னாட்டு புத்தகக் காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங் குகள் தனியாக ஒதுக்கப்பட் டுள்ளன. இவைதவிர சிறிய அளவில் புத்தகங்களை வெளி யிடும் பதிப்பாளர்களுக்காக சிறு அரங்குகளும், திருநங்கை பதிப்பா ளர்களுக்கு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சி தினமும் பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண் டைவிட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருவார்கள் என எ திர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் வரை புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. 

இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வருபவர்க ளுக்கு வசதியாக ஜனவரி 22ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்கவுள்ளார் என்றனர். பேட்டியின்போது பபாசி பொரு ளாளர் ஏ.குமரன், துணை இணைச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment