இஸ்ரோ வேலை வாய்ப்பு: 526 காலியிடங்கள் - பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

இஸ்ரோ வேலை வாய்ப்பு: 526 காலியிடங்கள் - பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO)  டிகிரி படித்தவர் களுக்கான காலிப்பணியிடங்கள் அறி விக்கப்பட்டுள்ளது. மொத்தம் 526 காலி யிடங்கள் நிரப்பட உள்ளன. இஸ்ரோ வில் வேலை பார்க்க வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள லாம்.

இந்திய அரசின் பாதுகாப்பு துறை யின் கீழ் செயல்பட்டு வரும் இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியி டங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க கடைசி தேதி 09.01.2023

ASSISTANT

காலியிடங்களின் எண்ணிக்கை - 342

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

JUNIOR PERSONAL ASSISTANTS

காலியிடங்களின் எண்ணிக்கை - 154

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

UPPER DIVISION CLERKS

காலியிடங்களின் எண்ணிக்கை - 16

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

STENOGRAPHERS

காலியிடங்களின் எண்ணிக்கை - 14

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 09.01.2023 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகளின்படி வயது வரம் பில் தளர்வு உண்டு.

ஊதியம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியா னவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apps.ursc.gov.in/CentralOCB-2022/advt.jsp  என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2023

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் ஷிசி/ஷிஜி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப் பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf   என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


No comments:

Post a Comment