உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு; டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு; டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெண்க ளுக்கான இடஒதுக்கீட்டு வழக்கின் நீதிமன்ற தீர்ப்பால், தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், குரூப் 4 தேர்வு முடிவுகளும் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப புதிய முறையைப் பின்பற்றி வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளி யாகும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளதால், இன்னும் 10 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவு கள் வெளியாகலாம். எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட ஜிழிறிஷிசி தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment