கேரள மாநில எல்லைப் பகுதியில் கம்பம் - கூடலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பல முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு (24.12.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

கேரள மாநில எல்லைப் பகுதியில் கம்பம் - கூடலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பல முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு (24.12.2022)

கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கம்பம் என். இராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

கூடலூர் டி.பி.எஸ்.ஆர். சனார்த்தனன், கம்பம் மாவட்ட தோழர்கள், கவுன்சிலர் ஆகியோர் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

காங்கிரஸ் இயக்க மூத்த தோழர், மதுரை மாவட்ட கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். போடி பகுதியை சேர்ந்த தோழர் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஓவியத்தை வரைந்து தமிழர் தலைவருக்கு பரிசாக வழங்கினார். 

ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராஜன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கினர். போடி ரகுநாகநாதன் குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.


No comments:

Post a Comment