நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் பேரணி - ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் பேரணி - ஆர்ப்பாட்டம்


நெய்வேலி, டிச. 27- நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட உள்ள விவசாயிகளின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி பேரணி ஆர்ப்பாட்டம் 26 .12. 2022 அன்று மாலை 5 மணி அளவில் நெய்வேலி நகரியம் வட்டம் 27 டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து புறப்பட்டது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தி வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சி பி அய். மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் டாக்டர் துரை சந்திரசேகரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் ராஜு ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெற்றது. 

பல்லாயிரக்கணக்கான மக்களும் தோழர்களும் பேரணி யில் பங்கேற்றனர் பேருந்து நிலைய திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. எழுச்சித் தமிழர் தொல் திருமா வளவன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், முனைவர் துரை.சந்திரசேகரன், டாக்டர் ஜவாஹிருல்லா, எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், வழக்குரைஞர் ராஜு, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் என்எல்சி நிறுவன விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் நிலம் வீடு எடுத்தவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்காததை கண்டித்தும் 17 அம்ச கோரிக்கைகளை விளக் கியும் உரையாற்றினர் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம் நன்றி கூறினார் 

திராவிடர் கழக கடலூர் மாவட்ட தலைவர் சோ.தண்ட பாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மண்டல இளைஞரணி செயலாளர் பச்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, பெரியார் வீர விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த மாணிக்கவேல், விருத்தாசலம் கழக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், மாணவர் கழகப் பொறுப்பாளர் ராமராஜ், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் கனகராசு, செயலாளர் செந்தில் வேல், அமைப்பாளர் சேகர், நெய்வேலி கழக நிர்வாகிகள் ராஜா சிதம்பரம், மாணிக்கவேல், நடராசமணி, வடலூர் மோகன், சிதம்பரம் கழக மாவட்ட இணை செயலாளர் யார் திலீபன், மஞ்சக்குழி தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஜெயபால், பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், வடலூர் தி.க அமைப்பாளர் முருகன், பெரிய காப்பங்குளம் பாவேந்தர் விரும்பி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்

No comments:

Post a Comment