பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

திருச்சி, டிச. 16- பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி நடை பெற்ற பெரியார் 1000 வினா- விடை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெல் தமிழ் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 12.12.2022 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணகுமார்  முதல் பரிசு பெற்ற மாணவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுப் பரி சையும், மகேஸ்வரி புத்தகங் களையும் வழங்கினார். இரண் டாம் பரிசு பெற்ற மாணவருக்கு மும்தாஜ் பதக்கத்தையும் நினை வுப் பரிசையும், புனிதவதி புத்த கங்களை வழங்கினார். மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு திலீப்குமார், மணிகண்டன் ஆகி யோர்  பதக்கம் மற்றும் நினைவு பரிசையும், முத்துச்செல்வி  புத்த கங்களையும் வழங்கினார்.

பெல் தமிழ் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளிக்கான நினை வுப் பரிசான பெரியார் படத்தை  முத்துச்செல்வி  தலைமையாசிரி யரிடம் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மாதவன் மின்பொருள் அங்காடி  உரி மையாளர் தோழர் அரசெழிலன் புத்தகங்கள் வழங்கினார். 

மேலும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதவன் மின்பொருள் அங் காடியின் சார்பாக சிறிதும் பெரிதுமாக 20 புத்தகங்களுக்கு மேல் வழங்கப்பட்டன. 

தமிழ் மொழியை பிழையின்றி உச்சரிப்பதற்கான புத்த கங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.  

பள்ளியின் சார்பாக போட் டியை சிறப்பாக நடத்தி பரிசுகள் வழங்கிய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இதில் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் கழகத் தோழர் கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment