விழுப்புரம், டிச. 16- விழுப்புரம் மாவட்டத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - பெரியார் சிந் தனை உயராய்வு மய்யம் கடந்த செப்டம்பர் மாதம் பெரியார் 1000 வினா-விடை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர் கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிச ளிப்பு மற்றும் பாராட்டு விழா விழுப்புரம் புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற் றது. முதல்பரிசு ரூபாய் 5000. இரண்டாம் பரிசு ரூபாய் 3000. மூன்றாம் பரிசு ரூபாய்2000 வழங் கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழுப்புரம் நகர்மன்ற தலைவர் ச.தமிழ்செல்வி பிரபு பரிசுகளை வழங் கினார்.
உடன் இப்பள்ளியின் முதல்வர் தலைமை ஆசி ரியை அருள் சகோதரி ரஞ்சிதம், விழுப்புரம் நகர தி.மு.க செயலாளர் இரா.சக்கரை, விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப் பராயன். விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, விழுப்புரம் மாவட்ட இளைஞரணித்தலைவர் அ.சதீஷ், தி.மு.க மாநில பேச்சாளர் துரை.மணி வேலன், நகர்மன்ற உறுப் பினர்கள் பிரியா பிரேம், ஜெயந்தி மணிவண்ணன், கோமதி பாஸ்கர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மில்கா குமரன், டொம்னிக், வில் சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக பள்ளி ஆசிரியை டெனிஸ் மேரி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment