சென்னை,டிச.16- விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள தம்பதியரின் குழந்தைகளின் நலனை கருதி மனுத்தாக்கல் செய்யாவிட்டாலும் இடைக்கால வாழ்வாதாரத் தொகை வழங்க உத்தரவிடலாம் என்று குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி, விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன் றத்தில் மனுத்தாக்கல் செய்திருந் தார். மனு நிலுவையில் உள்ள நிலையில் மனைவி தனது குழந் தையுடன் ஓசூரில் உள்ள பெற் றோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வருமானம் இல்லாததால் ஓசூரில் இருந்து சேலம் வந்து செல்வது சிரமம் எனக் கூறி தனது விவாகரத்து வழக்கை ஓசூருக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மனுத்தாக்கல் செய்திருந் தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பெண்களுக்கு சட்டத்தில் வழங் கப்பட்டுள்ள முன்னுரி மைகளை சுட்டிக்காட்டி வழக்கை ஓசூருக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், வாழ்வாதாரத் தொகை கோரிய மனுக்கள் பல நீதிமன்றங்களில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படாமல் நீண்ட காலம் நிலு வையில் உள்ளன. தம்பதியர் இடையிலான பிரச்சினை காரண மாக குழந்தை களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
குழந்தையின் தாய் வேலையில்லாமல் இருந்தால், அவரது வாழ்க்கைத் தகுதி வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து இடைக்கால வாழ் வாதாரத் தொகை வழங்கும்படி உத்தரவிடலாம். அவ்வாறு இடைக்கால வாழ்வாதாரத் தொகை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அத் தொகை உரிய நேரத்தில் வழங் கப்படுவதை உறுதி செய்ய வேண் டும். அவ்வாறு வழங்கத் தவறு வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கிராம நீதிமன்றங்களை உருவாக்க கோரிய வழக்கு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, டிச.16 கிராம நீதிமன்றங்களை உருவாக்க கோரிய வழக்கில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் கிராம நீதிமன்றங்களை உருவாக்க கோரி டில்லியை சேர்ந்த அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், 'கிராம நீதிமன்றம் சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும், பல மாநிலங்கள் கிராம நீதிமன்றங்களை ஏற்படுத்தவில்லை' என வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை பதிவா ளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர். கிராம நீதிமன்ற சட்டம் 2008 என்பது ஊரகப் பகுதிகளில் விரை வான மற்றும் அனைவரும் எளிதில் அணுகும் வகையிலான நீதி வழங்குவ தற்காக கிராம நீதிமன்றங்களை உருவாக் குவதற்கான சட்டம் ஆகும். இதன்படி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மராட்டியம், கேரளா உள் ளிட்ட 13 மாநிலங்கள் 445 கிராம நீதிமன் றங்களை உருவாக்கியுள்ளன. இவற்றில் 226 தற்போது இயங்கி வருகின்றன.
No comments:
Post a Comment