உயர் ஜாதி நலிந்த பிரிவினருக்கு EWS 10% இட ஒதுக்கீடு சரியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

உயர் ஜாதி நலிந்த பிரிவினருக்கு EWS 10% இட ஒதுக்கீடு சரியா?

வடக்குத்து பெரியார் படிப்பக 76 ஆவது மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சியில் விளக்கம்

வடக்குத்து, நவ. 21- வடக்குத்து இந் திரா நகரில் பெரியார் படிப்பகம் ஆசிரியர் வீரமணி நூலகம் சார்பில் 76 ஆவது மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிய தி.க தலைவர் கனகராசு தலைமையில் 20.11.2022 மாலை நடைபெற்றது.

கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக தலைவர் தண்ட பாணி. வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன். மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகி யோர் கருத்துரை ஆற்றிய பின்னர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், உயர் ஜாதியில் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சரியா? எனும் தலைப்பில் ஒன்றரை மணி நேரம் விளக்க உரை ஆற்றினார். 

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் டிஜிட்டல் ராமநாதன், ஒன்றிய கழக அமைப்பாளர் சேகர், வடலூர் மோகன், அசோக், வசந்த், பாவேந்தர் விரும்பி, திராவிடன், தர்மலிங்கம், திராவிட மணி, கோபாலகிருஷ்ணன், கலைச் செல்வி, விஜயா, சேப்பாநத்தம் வரதராஜன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். மறைந்த மேனாள் மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.சீனியம்மாள் நினைவாக அனைவருக்கும் சிற்றுண்டி வழங் கப்பட்டது. 

முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment