திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று சுங்கச்சாவடி கட்டணம் குறைப்பு - நிதின் கட்கரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று சுங்கச்சாவடி கட்டணம் குறைப்பு - நிதின் கட்கரி

புதுடில்லி, நவ. 21-- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சனின் கோரிக் கையை ஏற்று தமிழ்நாட்டில் 60 விழுக்காடு சுங்கச்சாவடி கட்ட ணத்தை குறைத்தார் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி.

 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி களை அகற்றிவிட்டு, அதற்கு பதி லாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்திருப்பதாக தனது பதில் கடிதத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஒன்றிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில், சுங்கச்சாவடி கட்ட ணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 60 கி.மீ. தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய் துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூ லிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment