ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து,. உலகெங்கிலும் உள்ள 7,500-பலமான பணியாளர்களை 50% ஆக குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம். அலுவலகத்துக்கு வர தடை

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து கருத்து தெரிவிக்க மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம்  தாக்கீது.

* சமீபத்தில் கசிந்த ஒரு அறிக்கை, ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கும் பிரச்சினையை மீண்டும் கிளப்பியுள்ளது. அறிக்கையில் தெரிவித் துள்ளபடி, மோடி அரசின் அலுவல் மொழி குழுவின் 11ஆவது தொகுதி, அய்.அய்.டி, அய்.அய்.எம்.,  எய்ம்ஸ் மற்றும் பிற மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக விரைவில் ஹிந்தி மட்டுமே இருக்கும் என்று அறிவுறுத்துகிறது; கேந்திரிய வித்யாலயாக்களில் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும்; ஒன்றிய அரசின் வேலைகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் ஹிந்தி மொழியே இருக்கும்.

தி டெலிகிராப்:

* இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் ராணுவத்தில் பணியாற்றும் நிலைமைக்கு மோடி அரசின் ‘அக்னிபாத்’ திட்டம் முரணானது என பிரியங்கா காந்தி அம்மாநிலத்தில் பிரச்சாரம்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment