செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

செய்திச் சுருக்கம்

உத்தரவு

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில் குறைகள் இருந்தால், அதில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு சிபிஅய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆராய...

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 4 மண்டலத்தில் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் இறப்புகளை ஆராய்வதற்காக சிறப்பு தணிக்கை குழு அமைக்கப் பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

குழு

நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிவரும் சாலை ஆய்வாளர்கள் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

எச்சரிக்கை

அரசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளிடம் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலக்கு

வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி தள்ளுபடியுடன் கடன் வசதி பெறும் திட்டம் வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.5990 கோடி இலக் கிடப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.

நடவடிக்கை

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல் துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உயரும்

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 28,291 மெகாவாட் மின்சாரம் தேவை ஏற்படும் என ஒன்றிய மின்சார ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சிறப்பு நிதி

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள சாலைகளை மேம் படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

பதிலளிக்க...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இணையம் மூலமாக நடத்தக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், மருத்துவக் கவுன்சிலும் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


No comments:

Post a Comment