பிஜேபி மோடி ஆட்சியின் சாதனையோ சாதனை! வாராக்கடன் 365 விழுக்காடு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

பிஜேபி மோடி ஆட்சியின் சாதனையோ சாதனை! வாராக்கடன் 365 விழுக்காடு அதிகரிப்பு

 காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

புதுடில்லி,நவ.24- காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிறீநேட் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- 

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை வாராக் கடன்கள் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தன. மோடி ஆட்சிக்காலத்தில், 2014ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுக்குள் இது ரூ.18 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. 

அதாவது, 5 ஆண்டுகளில் 365 விழுக்காடு அதிகரித்துள் ளது. 

இதுகுறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

அவற்றில் ரூ.13 ஆயிரம் கோடி மட்டுமே திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி வாராக் கடனில், 61 விழுக்காடு நிதி பற்றாக் குறையை சரிசெய்து விடலாம். ஒருசில தொழிலதிபர் களுக்கு மட்டுமே இந்த ஆட் சியில் பலன் கிடைக்கிறது. வங்கிக் கடன் பெற்று வேண்டுமென்றே திரும்ப செலுத்தாத 38 பேர், நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை இந் தியாவுக்கு கொண்டு வர எடுக் கப்பட்ட நடவடிக்கை என்ன? சொத்துகளை அடிமாட்டு விலைக்கு விற்க பொதுத்துறை வங்கிகளுக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளிக்கப்பட்டுள் ளது. 

பா.ஜனதா, தனது சாதனை களை சொல்லியோ, பிரச் சினைகளை முன்வைத்தோ தேர்தலை சந்திப்பது இல்லை. பிரதமர் மோடியின் முகத்தை வைத்தே போட்டியிடுகிறது என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment