பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

பதிலடிப் பக்கம்

சாவர்க்கர் யார்? - 'ஆனந்த விகடன்' படப்பிடிப்பு

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி எம்.பி. அவர்கள் ஏதோ குற்றம் சொல்லி விட்டாராம். அவர்மீது வழக்காம் - இதோ ‘ஆனந்த விகடன்' (18.10.2021) சாவர்க்கரைப் பற்றி எழுதிய விரிவான கட்டுரையைப் படியுங்கள்:

21.11.2022 பதிலடி பக்கத்தின் தொடர்ச்சி...

`காந்தியார் 4 வருடங்கள்தான் சிறையில் இருந்தார். ஆனால், சாவர்க்கர் 14 வருடங்கள் சிறையில் இருந்தார். அப்படியென்றால், யார் பெரிய தேசபக்தர்’ என்றும் கேட்கிறார்கள். இதில் இருக்கும் தகவல் சரி, ஆனால், பார்வை தவறு. காந்தி ஒரே முறையாக 4 வருடங்கள் சிறையில் இருக்கவில்லை. மொத்தம் பதினொரு முறை அவர் சிறைக்குச் சென்று திரும்பினார். தென்னாப்பிரிக்கச் சிறைகளும் அதில் அடக்கம்.

காந்தியாரும் சாவர்க்கரும்

ஒன்றை கவனிக்கவும். ஒவ்வொரு முறையும் ஒரு போராட்டம், அதில் விசாரணை, அதற்குப் பிறகு தண்டனை என்று சிறை சென்றவர் அவர். அவர் சிறை சென்றபோதெல்லாம், மக்கள் கொதித்தெழுந்தார்கள். காந்தியாரை விடுவிக்கக்கோரி போராடினார்கள். அவரும் தன் பங்குக்கு சிறை சீர்திருத்தம் என்று கள மிறங்கினார். ஆக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கண் முன்னால் இருந்த ஒரே வழி, காந்தியாரை விடுவிப்பது மட்டும்தான். ஒரு தடவை காந்தியார், நான்கு நாட் களுக்குள் மூன்று முறை கைது செய்யப்பட்டு திரும்பத் திரும்ப விடுவிக்கப்பட்டிருக்கிறார். அந்தளவுக்கு ஆங் கிலேய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்குபவராக இருந்திருக்கிறார் காந்தியார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் சிறைத் தண் டனை முடிந்து வெளியே வந்தபோது, காந்தியாரை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வாசலில் திரண்டு நின்றார்கள் என்பது வரலாறு. அவர் பின்னால் எப்போதுமே மக்கள் இருந்தார்கள். ஏனென்றால், அவர், அவர்களின் மனங்களில் இருந்தார். 75 வயதி லும்கூட சிறைக்குச் செல்லும் துணிவை, அவருக்கு அளித்தது அந்த மக்களின் அன்புதான்!

எல்லாவற்றுக்கும் மேலே, `நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் தொடர்ந்து செய்வேன்’ என்று, ஆங்கிலேயனின் நீதிமன்றத்தில் நெஞ்சம் நிமிர்த்தி அறிவித்தவர் காந்தியார்!

ஆனால், சாவர்க்கர் விவகாரம் அப்படியல்ல! அவருக்காக யாரும் இங்கே கொதித்தெழவில்லை. சாவர்க்கரை விடுவிக்கக் கோரி ஒரு போராட்டம்கூட இங்கே நடக்கவில்லை. ஏன், அவரது தரப்பினரேகூட அவரை மறந்துவிட்டிருந்தார்கள். சாவர்க்கருக்கும் மக்கள் செல்வாக்குக்கும் காத தூரம். சாவர்க்கர் என் றொருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் அறிந் திருக்கவில்லை. அறியும் அளவுக்கு சாவர்க்கரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பேசிய தெல்லாம் வன்முறை, வெறுப்பு, பிரிவினை மட்டும் தான்.

சிறைக்குள்ளேயும் அவர் அதைத்தான் செய்தார். கைதிகளை இஸ்லாமியர், ஹிந்துக்கள் என்று பிரித்துப் பார்த்து வேலையைக் காட்டினார். இது, அவர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்திலேயே பதிவாகியிருக்கிறது. `இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில், சங்கநாதம் எழுப்புங்கள் என்று ஹிந்துக் களை அவர் தூண்டினார்’ என்று, அவரது ஆதரவா ளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் பிரிவினைக்குக் 

காரணம் யார்?

ஜின்னாவுக்கு முன்பே, இரண்டு தேசங்கள் கோட் பாட்டை முன்மொழிந்தவர் சாவர்க்கர்தான். நன்றாகக் கவனிக்கவும். ஜின்னாவை வழிமொழியவில்லை சாவர்க்கர். அவர்தான் முன்மொழியவே செய்கிறார். அந்த `Holy land’  கருத்தாக்கத்திலேயே, இரண்டு தேசங்களுக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதையே, பின்னாளில் அரசியல்வெளியில் விரித் தெடுத்தார் ஜின்னா. அதாவது, கல்லை உரசி நெருப் பைப் பற்றவைத்தார் சாவர்க்கர். ஜின்னா அதை ஊதிப் பெரிதாக்கினார். அவ்வளவுதான்.

உண்மையில் 1939ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில் தான், `இரண்டு தேசங்கள் (Two Nations)’ எனும் தீர்மானத்தையே போடுகிறது, முஸ்லிம் லீக். ஆனால், 1937ஆம் ஆண்டே, `இரண்டு தேசங்கள்’ தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது, ஹிந்து மகா சபா. சாவர்க்கர் அப்போது அதன் தலைவர். 1937ஆம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று ஹிந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லிம்களுடையது’ என்று பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே பின்னர் தீர்மானமானது.

அடுத்து காட்சிக்கு வருகிறார், மாதவ சதாசிவ கோல்வால்கர். சாவர்க்கரின் சிஷ்யப்பிள்ளை இவர். கோல்வால்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

`ஹிந்துப் பெரும்பான்மை அடையாள அரசியலே உண்மையான தேசியவாதம். அது அல்லாத எந்த அரசியலும் இந்தியாவுக்கு விரோதமானது’ என்று இன்னொரு குண்டைத் தூக்கி வீசுகிறார். இவர்களின் இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகுதான், ஜின்னா அதிக நம்பிக்கை கொள்கிறார். `அவர்களே சொல்லி விட்டார்கள். அப்புறம் என்ன?’ என்று பிரிவினைக் கத்தியை இன்னும் ஆழமாக இந்தியாவின் நெஞ்சில் ஜின்னா இறக்க ஆரம்பித்தது 1940-களுக்குப் பிறகே!

இன்னுமொரு தகவல். 1945ஆம் ஆண்டு இன்னும் எல்லையைக் கடக்கிறார் சாவர்க்கர். `ஜின்னாவின் இரண்டு தேசங்கள் எனும் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. நாம் ஹிந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன்னொரு தேசம்’ என்கிறார்.

இங்கே நாம் இன்னொன்றைப் பார்க்க வேண்டும். இன்றுவரை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ஏன் பாரத ரத்னா மறுக்கப்படுகிறது? எம்.ஜி.ஆரால் அடைய முடிந்த அந்த விருதை அவரின் ஆசான் களான அவர்களால் ஏன் அடைய முடியவில்லை? இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, `அவர்கள் பிரிவினை பேசினார்கள்’ என்பது. பெரியாரும் அண்ணாவும் பேசியது பிரிவினை என்றால், சாவர்க்கர் பேசியதற்கு பெயர் என்ன? பெரியார், அண்ணாவுக்கு ஒரு நியாயம், சாவர்க்கருக்கு ஒரு நியாயமா? அதெப்படி ஒரே விஷயத்தில் இரண்டு நியாயங்கள் இருக்க முடியும் என்பதே நாம் எழுப்பும் கேள்வி!

காந்தியார் கொலை வழக்கில் சாவர்க்கர்

கடைசியாக, காந்தியார் கொலை!

காந்தியார் கொலையில் சிக்கியவர்கள், மொத்தம் 9 பேர். நாதுராம் கோட்சே, அவரின் சகோதரர் கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, ஷங்கர் கிஸ்தயா, தத்தாத்ரேயா பர்சுரே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இன்னொருவர் இருக்கிறார். அவர் திகம்பர் பாட்ஜே. இந்த பாட்ஜே மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், இவரது வாக்குமூலம்தான் கோட்சேவுக்கும் சாவர்க் கருக்கும் இருந்த தொடர்பை, தெள்ளத்தெளிவாகக் காட்டியது.

பாட்ஜேவின் வாக்குமூலம் இதோ!

`1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14ஆம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பேயில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டா வது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத் துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியாரையும் நேருவையும் முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கோட்சே என்னிடம் சொன்னார்’. `Gandhi and Nehru should be finished’என்ற வார்த்தையையே வாக்குமூலத்தில் சொல்கிறார் பாட்ஜே. அந்த ஜனவரி 14ஆம் தேதிதான், கோட்சேவின் கைக்கு துப்பாக்கியும் வந்து சேர்கிறது.

அடுத்த சந்திப்பு, ஜனவரி 17ஆம் தேதி நடக்கிறது. இப்போதும் அதே மூவர்தான் செல்கிறார்கள். இந்த முறை பாட்ஜே, சதனுக்குள் நுழைந்து, முகப்புப் பகுதி யில் நிற்கிறார். 10 நிமிடம் கழித்து கோட்சேவும் ஆப் தேவும் மாடி அறையில் இருந்து வெளியே வருவதை, பாட்ஜே கவனிக்கிறார். அவர்களுக்கு முன்னால் நின்றபடி ஒரு மனிதர் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முகம் பாட்ஜேவுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், குரல் நன்றாகக் கேட்கிறது. அந்த நபர், மராத்தியில் பேசுகிறார். `வெற்றியுடன் திரும்புங்கள்’ என்று, அவர் இருவர்களிடம் சொல்லும் வார்த்தை பாட்ஜேவின் காதில் விழுகிறது.

(தொடரும்)


No comments:

Post a Comment