குஜராத் தேர்தலில் பெரும் பணக்காரர்களை களமிறக்கிய பா.ஜ.க.! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

குஜராத் தேர்தலில் பெரும் பணக்காரர்களை களமிறக்கிய பா.ஜ.க.!

அகமதாபாத், நவ. 19 182 தொகு திகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.  இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக, பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டுமே  பெரும் பணக்காரர்களை வேட்பாளர் களாக நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. வேட்பாளர்களின் சொத்து மதிப்பு  விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், பாஜக சார்பில் களம் காணும் வேட்பாளர்களில் 80 சதவிகிதம் பேர் பெரும் பணக்காரர் களாக உள்ளனர். முதற்கட்ட தேர்தலில்  போட்டியிடும் பாஜக-வின் 89 வேட்பாளர் களில் 60 பேர் பெரும் பணக்காரர்கள்.

இவர்களில், அதிகபட்சமாக துவாரகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பபுவா மணக்கின் சொத்து மதிப்பு 115  கோடியே 58 லட்ச ரூபாயாக உள்ளது. இவர் போலவே, பாஜக-வின் 7 வேட்பாளர்கள் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2017 சட்டப்பேர வைத் தேர்தலின் போது ஒரு கோடியே 77 லட்ச ரூபாய் சொத்து வைத்திருப்பதாக தெரிவித்த பாஜக-வின் உள்துறை அமைச்சர் ஹார்ஷ் சாங்க்வி, கடந்த 5 ஆண்டு களுக்குள் 17 கோடியே 14 லட்ச ரூபாய்க்கு அதிபதியாக மாறியுள்ளார். 

இதேபோல பாஜக சார்பில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா (32) தனது குடும்பத்திற்கு ரூ. 97 கோடியே 35 லட்சம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ் சார்பில் 35 கோடீஸ்வரர்களும், ஆம் ஆத்மி கட்சியில் 7 பெரும் பணக்காரர்களும் போட்டியிடுகின்றனர். 

காங்கிரஸ் வேட்பாளர்களில்  ரனில் ராஜுகுரு அதிகபட்சமாக 159 கோடியே 84 லட்ச ரூபாய் சொத்துக் கணக்கு காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment