வீடுதோறும் விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

வீடுதோறும் விடுதலை

செ. திருமாமணி, வட்டாட்சியர் (விருப்ப ஓய்வு) ஆரியூர், விழுப்புரம் மாவட்டம்

விடுதலையைக் கண்டாலே கடமையுணர்ச்சி யெழும். 

எடுத்தால் கரங்களிலே இனமான உணர்ச்சி வரும். 

படிக்கத் தொடங்கினால் பாதுகாப்பு உணர்ச்சி மிகும்

"படை வரிசை நீளும்; பகை வரிசையாய்" வீழும்

என்றபடி இந்த எழுச்சி மறுமலர்ச்சி இங்கு நிகழ்ந்திருக்கின்றது என்னும்போது நெஞ்சம் விம்முகின்றது, பெருமிதம் தோன்றுகின்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலைப்பணி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் களாகிய 1) ஆரியூர், 2) வேடம்பட்டு, 3) அல மேல்புரம், 4) ஜானகிபுரம், 5) வழுதரெட்டி,6) அய்யன்கோவில்பட்டு, 7) சாலமேடு, 8) கக்கனூர் 9) மரகதபுரம் 10) கோலியனூர் 11) வெங்கந்தூர் 12) சத்திப்பட்டு, 13) லட்சுமிபுரம், 14) புதுகருவாட்சி, 15) திருக்குணம், 16) வாழப்பட்டு, 17) காணை, 18) நன்னாடு, 19) அரும்புலி, 20) கப்பூர், 21) தோகைப் பாடி, 22) வெங்கடேசபுரம், 23) அருந்ததியர் தெரு காலனி, 24) சோழகனூர், 25) பானாம்பட்டு, 26) சிறுவாலை, 27) கஞ்சனூர், 28) வேம்பி, 29) வெள்ளையாம்பட்டு, 30) வெள்ளேறிப்பட்டு, 31) செம்மார், 32) ஏனாதிமங்கலம், 33) மாரங்கியூர், 34) சித்தேரிப்பட்டு, 35) காரணை, 36) சென்னகுணம், 37) கெடார், 38) ஆசாரகுப்பம், 39) சோழாங்குடி, 40) அதனூர், 41) பேரங்கியூர், 42) பிடாகம், 43) ஆனாங்கூர், 44) பில்லூர்,  45) காவணிப்பாக்கம், 46) கொளத்தூர், 47) அறியலூர், 48) சித்தாத்தூர், 49) கண்டமாணடி 50) வெண்மணியாத்தூர்,  51) சத்திப்பட்டு அண்ணாநகர் காலனி, 52) ஒருகோடி, 53) விராட்டிகுப்பம், 54) ஆலாத்தூர், 55) கொண் டங்கி, 56) பழைய மேலகொந்தை, 57) வயலாமூர், 58) ஆவுடையார்பட்டு, 59) ரெட்டிகுப்பம், 60) தும்பூர், 61) செம்மேடு ஆகிய 61 சிற்றூர்களிலும் மொத்தம் 516 விடுதலை நாளேடுகள் உறுப்பினர் உரிமையில் வழங்கப்பட்டது.

விடியலைத் தேடுவோரின் 

கைகளில் விடுதலை

விடுதலை நாளேட்டினை பெற்றவர்கள் யாவரெனில், 1)திருநங்கைகள், 2) நரிக்குறவர்கள், 3) சுயஉதவிக்குழு மகளிர், 4) இருளர்கள் (பழங் குடியினர்), 5) பறையிசைக் கலைஞர்கள், 6) புரத வண்ணார்கள் 7) கிராமப் பூசாரிகள், 8) டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், 9) துப்புரவு பணியாளர்கள், 10) தேநீர் கடைகள், 11) வேடம் பட்டுவேட்டுவர் காலனி, 12) அறிஞர் அண்ணா மூட்டை,   தூக்குவோர் சங்கம், 13) விவசாயிகள், 14) உழைக்கும் மக்கள், 15) விளிம்புநிலை மக்கள் என பலத் திறத்தினர் ஆவர். 

தமிழர் தலைவர் ஆசிரியர் நற்சான்று

விடுதலை நாளேட்டின் உறுப்பினர் உரிமத் தொகைகளோடு, பெயர் பட்டியல்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கிய போது நமது ஆசிரியர் வியந்து "நான் விடுதலை நாளேடு எத்தகையோரிடம் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ அத்தகைய பணியே - என் கனவே, நிறைவேறியிருக்கின்றது. இதைத்தான் எதிர்பார்த்தேன்" என்று கனிவுடன் கூறிப் பாராட்டி மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

தந்தைப் பெரியாரின் 

விடுதலை ஊர்வலம்

கிராமங்களில் உள்ள காலனி தெருக்களுக்கு வராமல் ஊர்தெருக்களில் மட்டுமே ஊர்வலம் வரும் "சாமி ஊர்வலத்தை" தோற்கடிக்கும் வகையில் இன்றைய தினம் தந்தைப் பெரியாரின் விடுதலை ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது. தமிழர் தலைவர் கண்ட கனவுபோல் செல்லாத இடமெல்லாம் விடுதலை சென்றிருக்கின்றது என்றால், இதுவரையில் கரம்பாய்க் கிடந்த இடத்தில் 'விடுதலை' தொடங்கி 88 ஆண்டுகள் சென்றிருந்தும், சென்று சேராத இடத்தில் சேர்ந்தது. அதாவது விதைக்கப்பட்டது என்றால் வீண் போகாது, விளைந்து வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

அடித்தட்டு மக்களின் அவலநிலை.

அனைவரும் சமூக அடித்தட்டு மக்கள், விடுதலைக்கு இதுநாள் வரையில்  அறிமுகம் ஆகாமலேயே இருந்தார்கள் என்பதை எண்ணும் போது ஏன் இந்த தாழ்த்தப்பட்டநிலை? எங்கு சென்று மீட்டு எடுக்க வேண்டுமோ, அங்கு தந்தைப் பெரியார் "யார்?" - தன்மான இயக்கம் என்பது என்ன? அதன் சீரிய சிந்தனை என்ன? என்றுகூடத் தெரியாத நிலையில் அடித்தட்டு மக்கள்  அறியாமை ஆழத்தில் அழுந்தியே இருந்துள்ளனர். மிகவும் சிலருக்கு மட்டும் கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் என்ற அளவில் தெரிந்திருக்கிறது.  

'விடுதலை' பெறுபவர்கள், 

“விடுதலையும்" பெறுவார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில், சிற்றூர் பகுதிகளில் வேண்டி, வேண்டி வீதிதோறும் சென்று மக்களை சந்தித்து இனமானத்துடன் விடுதலை உணர்த்தி படிக்க ஒருமை இன்றியமையாமையை வேண்டிய உரிமையோடு பழகியபிறகே அவர்களைப் பக்குவம் அடையச் செய்ய முடிந்தது. உறவுரிமை ஓங்கிய நிலையில் அவர்களை ஒன்றுபடுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து முடிந்தது. அத்தகைய இடையறா முயற்சி, நடைபெற்று வந்தால் அவர்கள் தொடர்ந்து விடுதலை பெறுவார்கள்!, விடுதலையும் பெறுவார்கள்!.

7) கிராமங்களில் விடுதலைப் பயணம்.

 சிற்றூர்களில் நாளேடுகள் ஏதும் வரப்பெறாத நிலையில் புதியதாக வரும் விடுதலை நாளேட் டினை ஆர்வத்துடன் நிலையில் நாள்தோறும் விடுதலையைப் படித்திட வேண்டும் என்னும் வேட்கை மிகுந்திருக்கிறது. அஞ்சலில் மொத்தமாக வரும் ஏடுகளை வீடுதோறும் அந்தந்த பகுதியில் ஒவ்வொருவர் பொறுப்பேற்று குழுவாய்க் கூடி யிருந்து படிக்கின்றார்கள். மரத்தடிகளில் ஒருவர் உரத்தக் குரலில் படித்துக் காட்ட கூடஇருந்து மற்ற வர்கள் கேட்டு மகிழ்கின்றனர். பகலில் வேலைக் குச் செல்லுவோர், இரவில் வீடு வந்து படிக் கிறார்கள். வயதானவர்கள் எழுத்துக் கூட்டி படிக் கின்றனர். மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் படிக்கின்றனர். இளைஞர்கள் விளையாட்டு மைதானங்களில் அமர்ந்து படிக்கின்றார்கள். நாளேடு இன்று வரவில்லையே - பிறகு என்றைக்கு வரும் என்ற வினாக்கள் எழுகின்றன. மேலும், விடுதலை நாளேட்டினை பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தனை வருடங்களாகியும் புதியதாக ஒரு நாளேடு தங்கள் பகுதிகளுக்கு வருவது குறித்து மக்களிடையே மகிழ்ச்சி, கண் களில் வெளிச்சம், பக்கம் பக்கமாய் புரட்டிப் பார்த்து படிப்பதில் மிகுந்த ஆர்வம் நிலைத் துள்ளது.

விடுதலைப் பணி தொடர வேண்டும்.

அடித்தட்டு மக்கள், விடுதலை விழிப்புணர்வு விடுதலை நாளேட்டில் ஒளிப்படங்களை குறைத்து பல செய்திகள், விழிப்புணர்வுக் கட்டுரைகள், பகுத்தறிவு சிந்தனைகள், சொற்பொழிவுகள் அதிக மாக இடம் பெறலாம். கிராமங்களில் பகுத்தறிவு வீதி நாடகங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு கருத்து கலைநிகழ்ச்சிகள், ஆசிரியர் உள்ளிட்ட கழகத் தொண்டர்கள், பகுத்தறிவு சிந்தனை பேச்சாளர்களைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பு விழாநாட்களில் நடத்தலாம் - கூடி உண்ணும் குடும்ப நிகழ்ச்சிகளையும்  மேற்கொள்ளலாம். அறக்கட்டளை மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் விடுதலைக்கான உரிமத் தொகையை செலுத்தி ஏழை கிராமத்து மக்களுக்கு இலவசமாக வழங்க முன் வரவேண்டும். அவ்வாறு தன்னார்வ உணர்வோடு தொண்டு செய்தால், விடுதலை நாளேடு கிராமங்கள் தோறும் மிக விரைவில் வேகமாக பரவும் என்பதில் அய்ய மில்லை.

முடிவுரை

"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்" 

என்றார் திருவள்ளுவர்.

சிற்றூர்களில் விடுதலை நாளேட்டினை வழங்கும் முயற்சியை தொடங்கியிருக்கின்றோம். இன்னும் எத்தகைய வழியிலெல்லாம் விடுதலை உணர்வை ஊட்டலாம் என்று தேர்ந்து செலுத்த தியாகங்களை செய்து சாதனை புரிவோம்.  

No comments:

Post a Comment