விதி மீறிய ஒன்றிய அமைச்சர் - இடிக்கப்படுகிறது பங்களா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

விதி மீறிய ஒன்றிய அமைச்சர் - இடிக்கப்படுகிறது பங்களா

மும்பை,நவ.19- மும்பையில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணேவுக்குச் சொந்தமான பங்களாவில் விதிமீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கும் பணி   தொடங்கியது.

முன்னதாக, பங்களாவில் விதி மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமைச்சர் தரப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய் தது. இதையடுத்து, இடிக்கும் பணியை மும்பை மாநகராட்சி மேற்கொண்டது.

ஒன்றிய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணேக்கு சொந்தமான இந்த பங்களா மும்பை ஜுஹு பகுதியில் உள்ளது. இங்கு நில விகித விதிகள், கடற்கரை ஒழுங்கு மண்டல விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கட் டடம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மும்பை பெருநகர மாநகராட்சி, தீய ணைப்புத் துறை, சுற்றுச்சூழல் துறையி டம் உரிய அனுமதியும் பெறவில்லை.

இந்தக் கட்டுமானப் பணியை நாராயண் ராணே குடும்பத்துக்குச் சொந்தமான கால்கா ரியல் எஸ்டேட் நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், கட்டடத்தை முறைப்படுத் துமாறு மும்பை பெருநகர மாநக ராட்சியிடம் நாராயண் ராணே சார் பில் கடந்த ஜூனில் தாக்கல் செய்யப் பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-ஆவது மனு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மாநகராட்சியின் பரிசீல னையில் இருந்தது.

அப்போது, மனுவின் மீது மாநக ராட்சி பரிசீலனை நடத்தி முடிவை எடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி, நாராயண் ராணேவுக்கு சொந்தமான கால்கா ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அங்கீகாரமற்ற கட்டு மானத்தை 2 வாரத்தில் மும்பை பெருநகர மாநகராட்சி இடித்துவிட்டு, அது தொடர்பான அறிக்கையை அதற்கடுத்த ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணேக்கு ரூ.10லட்சம் அப ராதமும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அமைச்சர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், மனுவை விசார ணைக்கு ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட் டனர். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நாராயண் ராணேயின் பங்களாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகள் இடிக்கப் படுகின்றன.


No comments:

Post a Comment