செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

செய்திச் சுருக்கம்

பணியிடங்கள்

கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இத்தேர்வுக்கு டிசம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மீட்பு

மியான்மர், கம்போடியா, தான்சானியா நாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 22 தமிழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.

நடவடிக்கை

சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி யில், விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்.

நீட்டிப்பு

சம்பா நெற்பயிரை காப்பீடு செயதிடாது விடுபட்ட விவசாயிகள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யும் வகையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்

தமிழ்நாடு அரசின் சீர்திருத்த நடவடிக்கை காரண மாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் தற்போது வரை ரூ.23.314 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப் பட்டுள்ளது.

முன்மாதிரியாக...

சட்டங்களை முறையாக பின்பற்றி, வரி செலுத்து வதில் அரசு ஊழியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரத்தினசாமி வலியுறுத்தல்.

கூட்டுறவு

கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர் களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட வுள்ளது என அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்.

ஆய்வு

அமெரிக்காவில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆய்வு செய்தார்.

வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 2.22 லட்சம் பேர் எழுதிய காவல் துறைக்கான துணை ஆய்வாளர் தேர்வு முடிவு கள் நேற்று வெளியிடப்பட்டது. 438 பேர் தேர்வாகி யுள்ளனர்.

அபராதம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்திய கடைகளுக்கு ரூ.12,55,700 அபராதம் விதிக்கப் பட்டு, 2,671 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

ஆய்வு

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குறைக்க

சுங்கச் சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

வழக்கை...

நாள்தோறும் பத்து வழக்குகளை உச்சநீதிமன்றத் தின் அனைத்து அமர்வு நீதிபதிகளும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவு.

மீறினால்

தனி நபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment