அனைத்துப் பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மய்யம் அமைக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

அனைத்துப் பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மய்யம் அமைக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ. 19- ‘தமிழ்நாட் டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மய் யம் அமைக்க வேண்டும்’ என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மதுரை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த ஏ.வெரோணிகா மேரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: "நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ (பாலியல்) வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. பள்ளி மாணவி களுக்கு பாலியல் தொந் தரவு அளித்ததாக ஆசிரி யர்கள் பலர் கைது செய் யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவிகளை அதே பள் ளியில் பணிபுரியும் ஆசிரி யர்களே பாலியல் துன் புறுத்தல் செய்த நிகழ்வு கள் நடைபெற்றுள்ளனது.

பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகும் பள்ளி மாணவிகள் மனரீதியாக வும், உடல்ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு ஆளா கின்றனர். மீண்டும் பள் ளிக்கு செல்லும்போது பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகி றது. இதை தடுக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நோக்கத்தில் நடமாடும் மனநல ஆலோ சனை மய்யம் அமைத்து தமிழ்நாடு அரசு 17.5.2012இல் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைப் படி பள்ளிகளில் நடமா டும் மனநல ஆலோசனை மய்யங்கள் அமைக்கப் பட்டுள்ளதா என்பது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் பல்வேறு தக வல்கள் மற்றும் புள்ளி விவரங்கள் கேட்டு மனு அனுப்பினேன். ஆனால் அரசிடமிருந்து எந்த தகவல்களும், புள்ளி விப ரங்களும் இதுவரை தரப் படவில்லை. அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது பல பள்ளிகளில் பெயர ளவில் நடமாடும் மனநல ஆலோசனை மய்யங் களை தொடங்கியுள்ள னர். அதன் பிறகு திட் டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மய் யங்கள் இல்லாத நிலையே உள்ளது.

எனவே, தமிழ்நாட் டில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்க நடமாடும் மனநல ஆலோசனை மய்யம் செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று மனு வில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோசனை மய் யம் அமைப்பது தொடர் பாக 2012இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆலோ சனை மய்யம் செயல்படா தது ஏன்? பள்ளிகளில் நடமாடும் மனநல ஆலோ சனை மய்யம் முறை யாக செயல்படுத்த வேண்டும். இந்த ஆலோசனை மய் யம் மாணவ, மாணவிக ளுக்கு முக்கியமானது. எனவே, தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோ சனை மய்யம் அமைத்து, மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment