Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பட்டினியின்மை இலக்கை எட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
November 22, 2022 • Viduthalai

சென்னை, நவ. 22- மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப் பினை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் அரசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வரு கிறது. இதன்மூலம் ‘பட்டினியின்மை‘ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இரண்டாவது ஆய்வு கூட்டம் நேற்று (21.11.2022) நடந்தது.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார குறியீடுகளை கொண் டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மா னிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கை தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாக கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய எண்ணம். என்னை பொறுத்தவரையில் இந்த நோக்கத்தில் இம்மியளவும் மாறாமல் மேல் நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணமானது நிறைவேறி வருகிறது.

இதில் மிக முக்கியமானது கிராமப் புற வளர்ச்சி. கிராமப்புற பிரச்னைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளை செய்து தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த மே 18ஆம் தேதி இக்குழுவினுடைய முதல் ஆலோ சனை கூட்டம் நடந்தது. இன்று நடப் பது இரண்டாவது ஆலோசனை கூட் டம். இந்த கூட்டத்தில் அய்ந்து முக்கிய குறிக்கோள்கள் குறித்து ஆலோசிக்கப் பட உள்ளது.

1. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதியினுடைய மேம்பாட்டு திட்டம்: 

நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப்படும் ரூ.5 கோடி நிதி மூலமாக பல்வேறு பணிகள் ஊரக பகுதியில் நிறைவேற்றப்படுகிறது. 2019-2020ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 3,471 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 3,043 பணிகள் நிறைவு பெற் றுள்ளன. மீதமுள்ள 428 பணிகள் முன் னேற்றத்தில் உள்ளது. அதேபோல், 2021-2022ஆம் ஆண்டினை பொறுத்த வரைக்கும், 1,015 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 570 பணி கள் முன்னேற்றத்தில் உள்ளன.  

2. தேசிய நல்வாழ்வுக் குழுமம்: 

பொதுமக்கள் அனைவருக்கும் சம மான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே இந்த திட் டத்தினுடைய நோக்கம். தமிழ்நாட் டைப் பொறுத்தவரைக்கும், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம் - மனநலத்தை மேம்படுத்துதல், காச நோய் இறப்பில்லா திட்டம், நடமாடும் மருத்துவ குழு, நடமாடும் மருத்துவ மனை, இளம் சிறார் நல்வாழ்வைத் தேடி (ஊட்டச்சத்து கணக்கெடுப்பு), பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர கால மேலாண்மை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் அவசர கால மேலாண்மை பிரிவு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

3. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்: 

மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 லட் சத்து, 774 குழந்தைகள், 7 லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இச்சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம் பர் 2022 முதல் மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இக்குழந் தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறி வூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ எனும் திட்டம் கடந்த 21.5.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத் துவ குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச் சத்து மற்றும் மருத்துவ சேவை அளிக் கப்பட்டு வருகிறது.

4. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்: 

தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது விநியோக திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப் பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், ‘பட்டினியின்மை’ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக் கும் பொருட்டு, ஒரு தலைவர் மற்றும் அய்ந்து உறுப்பினர்களுடன் கூடிய மாநில உணவு ஆணையம் அமைக் கப்பட்டுள்ளது.

5. பிரதமரின் முன்னோடி கிராம திட்டம்:

கிராம மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங் களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய இத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. ஒரு கிராமத்துக்கு ரூ.20 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களை சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த அய்ந்து திட்டங் களின் செயல்பாடுகள் தொடர்பாக அனைவரும் விரிவாக ஆலோசனை செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்ட முமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமா னதுதான். இவை அனைத்தும் ஒட்டு மொத்தமான வளர்ச்சிக்கு ஒவ்வொரு விதத்தில் உதவி செய்பவை. எந்த திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைகோடி மக்களை யும் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம். உங்களின் செயல்பாடு கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதி யையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உருவாக்கிடும் என்ப தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப் பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர்.நட ராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் கள் வி.ஜி.ராஜேந்திரன், என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட் டையன், தலைமை செயலாளர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn