ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு குழு அமைத்திருப்பது, மார்பி பாலத்தின் சாவுகளை மறைக்கவே என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.

* மோடி அரசின் அக்னிபாத், ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் அனைத்தும்,  மக்களிடம் துயரத்தையே ஏற்படுத்தியுள்ளது என ராகுல் பேச்சு.

தி இந்து:

* உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து, அதிமுகவின் நிலைப்பாடு ஆபத்தானது. எம்.ஜி. ராமச்சந்திரன் 1980 நாடாளுமன்ற தேர்தலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே ‘கிரீமி லேயர்’ என்ற கருத்தை வலுவாக வாதிட்ட சில மாதங் களுக்குப் பிறகு, தோல்வியை சந்திக்க நேரிட்டது.இந்த வரலாற்று சூழலை கருத்தில் கொண்டு, அதிமுக தலைமை ணிகீஷி ஒதுக்கீட்டை ஆதரிப்பதன் மூலம் ஒரு ரிஸ்க் எடுத்ததாக தெரிகிறது. அக்கட்சி தனது நிலைப்பாட்டை கடைப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் ராமகிருஷ்ணன்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment