ஊழல் குற்றச்சாட்டுகள் : குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் பெரும் பின்னடைவு! - காங்கிரஸ் தலைவர் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

ஊழல் குற்றச்சாட்டுகள் : குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் பெரும் பின்னடைவு! - காங்கிரஸ் தலைவர் கருத்து

அகமதாபாத்,நவ.20- குஜராத் சட்டப் பேரவைக்கான வேட்பாளர் பட் டியலை அறிவித்த நாளிலிருந்தே பா.ஜ.க.வுக்கு பிரச்சினை ஆரம்பித்து விட்டதாகவும், அதிருப்தி தலைவர்கள் வெளிப்படையாகவே  பா.ஜ.க.வை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் சக்தி சிங் கோஹில் கூறியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, 167 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ள பா.ஜ.க., அதில், 69 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. 38 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.

வாய்ப்பு அளித்துள்ள 69 சட்டமன்ற உறுப்பினர்களிலும் 17 பேர், கடந்த 10 ஆண்டுகளில் வேறு கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தவர்கள்.

குறிப்பாக காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய ஹர்திக் படேல், பாகாபாய் பரத் உள்ளிட்ட பலருக்கு அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. காங்கிரசிலிருந்து விலகிய மோகன் சிங் ரத்வாவின் மகன் ராஜேந்திர சிங் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட் டுள்ளார்.

இது மூத்த பா.ஜ.க. தலைவர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் அவர்கள், சுயேச்சையாக போட் டியிடவும் திட்டமிட்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கோஹில், மேலும் கூறியிருப்பதாவது: 

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பா.ஜ.க. தலைவர்கள் வெளிப்படையாகவே பா.ஜ.க.வை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இது போன்றவை அரிதாகவே நடக்கும் நிகழ்வுகள். அதே நேரம் முற்றிலும் எதிர்பார்க்க முடியாதவை என்று சொல்ல முடியாது.

பா.ஜ.க. தலைமைக்கு பெரும் அவமானம்!

பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் பொறுப்பு, ஊழல் குற்றச் சாட்டுகளின் சுமைகளை உணர் கிறார்கள். மறுபக்கம் பா.ஜ.க. மேலிடம் காங்கிரசிலிருந்து கட்சித் தாவிய வர்களை வேட்பாளர்களாக திணித்து உள்ளது. இதன் காரண மாக பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் அதிகளவிலான கோபமும், விரக்தியும் ஏற்பட்டு இருக் கிறது. 

இது பா.ஜ.க. தலைமைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் ஜனநாயகமான, வெளிப் படையான கட்சியாகும். சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடைக் காமல் ஏமாற்றத்தில் உள்ளவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியில் வழி இருக்கிறது. ஆனால், முழுக்க முழுக்க மய்யப் படுத்தப்பட்ட, வெளிப்படை தன்மை இல்லாத பா.ஜ.க.வில் முன் எப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன." 

-இவ்வாறு சக்தி சிங் கோஹில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment