பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் பூச முடிவாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் பூச முடிவாம்

பெங்களூரு, நவ. 20 - கருநாடக மாநிலத்தில் புதிதாக கட்டப் படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிப்பதென அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கருநாடகா மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆளும் பாஜக அரசு, ரூ. 1,800 கோடி செலவில் 7,601 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட் டுள்ளது. 

இம்மாத இறுதிக்குள் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் வகுப் பறை கட்டுமானப் பணியை தொடங்க உள்ளன.  இந்நிலையில் புதிதாக கட்டப்படும் பள்ளி வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் அடிப்பதுடன் வகுப் பறைகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பெயரைச் சூட்ட கர்நாடக கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பி யுள்ளது. அதில், கட்டுமானம் முடிந்த பின் காவி வண்ணம் பூச வேண்டும் என்று கூறியுள்ளது.  கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்வித் துறையை காவிமயமாக்குவதற்கு ஆளும் பாஜக அரசு மேற்கொள்ளும் திட்டத்தின் ஒருபகுதியே காவி வண்ணம் பூசும் உத்தரவு என்று குற்றம் சாட்டியுள்ளன. மாண வர்கள் மத்தியில் மத உணர்வைப் புகுத்தும் முயற்சி என்றும் சாடியுள்ளன. ஆனால், ‘‘அனைத்தையும் அரசியல் கண்ணோட் டத்தில் பார்ப்பதை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண் டும். புதியதாக கட்டப்படும் பள்ளி கட்டடங்களுக்கு காவி வண்ணம் பூசுவதில் என்ன தவறு உள்ளது. நமது நாட்டு தேசியக் கொடியின் மேல் பகுதியில் இருப்பது செங்காவி வண்ணம்தான். அதேபோல சுவாமி விவேகானந்தரின் பெயரில் பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விவேகான ந்தர் ஒரு துறவி. காவி ஆடை அணிந்திருந்தார். விவேகா என்ற சொல்லுக்கு அனைவருக்கும் அறிவு என்று பொருள். இதை  ஏன் எதிர்க் கட்சிகள் புரிந்துகொள்ள வில்லை’’ என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment