‘கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

‘கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு'

கொச்சி, நவ.6 கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

 கேரள உயர்நீதிமன்றத்தில் 23 வயதான எம்.பி.ஏ. மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து, பாலுறவு வைத்துக்கொண்டதாகவும், அத னால் தான் கர்ப்பம் தரித்து இருப்பது 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறி, தனது 26 வார கால கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி இருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி வி.ஜி. அருண் விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலையை மருத்துவர்கள் குழு சோதித்து, அந்தக் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் பெற்றது. 

அதில், பாதிக்கப்பட்டுள்ள மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், கர்ப்பத்தைத் தொடர்வது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவி கர்ப் பத்தை கலைத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இதுகுறித்த தீர்ப்பில், ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவும் அல்லது கர்ப்பத்தை தவிர்க்கவும் உள்ள உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

அரசமைப்புச் சட்டப் பிரிவு

இது குறித்து பெண்களுக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உரிமை வழங்கி உள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த மாணவி தனது கர்ப்பத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது அதற்கான வசதி களைக் கொண்ட பிற மருத்துவமனைகளிலோ கருக் கலைப்பு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment