மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்!

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையைக் கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக் கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை பன்னாட்டு புகழ் பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ ’ (Science Advances)  இதழ் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு  -  புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. “ஒரு  நாடு எந்த அளவுக்கு மத நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏழ்மையில் சிக்குண்டு கிடக்கிறது” என்று புதிய ஆய்வு கூறுகிறது. அல்பேனியாவிலிருந்து ஜிம்பாப்வே வரை உள்ள உலகின் பல்வேறு நாடுகளின் தனி மனித வருவாய், சமூகப்  பிரச்சினை, நாணய மதிப்பு, வளர்ச்சித் திட் டங்கள்  ஆகியவற்றைச் சேகரித்து விரிவாக நடத் தப்பட்ட ஆய்வு இது. மதச்சார்பின்மைக் கொள்கை வளர்ச்சிக்கு ஒரு முன் நிபந்தனை. மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவதாலேயே பொருளாதார வளர்ச்சி தானாக வந்து விடும் என்பது  இதன் அர்த்தமல்ல” என்று ஆய்வுக் குழுவை  வழி நடத்திய டேமியன் ரக் (Damien Ruck) கூறியுள்ளார்.  “அதே  நேரத்தில்  மதச்சார்பின்மைக் கொள்கை வழியாக தனி மனித உரிமைகளையும் மாண்புகளையும் கூடுதலாக மதித்துப் பின்பற்றும்போது பொருளாதார முன்னேற் றத்தை அது சாத்தியமாக்குகிறது. இது எங்கள் ஆய்வில் கண்டறிந்த முடிவு” என்றார் ரக்.


No comments:

Post a Comment