"மழைக்காக லீவு விடுங்க" என்று கேட்ட பள்ளி மாணவன் - ரொம்ப கஷ்டமான கேள்வி என்று பதில் கூறிய மாவட்ட ஆட்சியர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

"மழைக்காக லீவு விடுங்க" என்று கேட்ட பள்ளி மாணவன் - ரொம்ப கஷ்டமான கேள்வி என்று பதில் கூறிய மாவட்ட ஆட்சியர்!

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால் பெரும்பாலான மழைக் காலங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் பெருமழையும் அதனைத் தொடர்ந்து சமவெளிப் பகுதிகளில் சாரல் மழையும் பெய்யும். இதனால் அங்கு மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது கொஞ்சம் சிக்கலான முடிவுதான்.

இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் ஆட்சி யரின்  டுவீட்டர் பதிவில் “சார் மழை வரும் என்று டிவியில் செய்தி வருகிறது, லீவு விடுவீர்களா” என்று கேட்டதற்குப் பதில் கூறிய நெல்லை ஆட்சியர், 

"நெல்லையில் இரவு நேரங்களில் மழை பெய்யும். காலையில் லேசான சாரல் அடிக்கும். காலையில் தாலுகாக்களில் மழை நிலவரம் குறித்து விசாரிப்பேன். அப்போது விடுமுறை விடுவதா வேண்டாமா என கேள்வி வரும். அதற்குள் மக்கள் விடுமுறை விடும்படி டுவீட்டரில் டேக் செய்வார்கள். பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை நிலவரம் குறித்து விசாரிப்பேன். அங்கு லேசான மழை பெய்வதாகத் தகவல்கள் வரும். பின்னரே விடுமுறை விட வேண்டாம் என முடிவெடுப் பேன். இருப்பதிலேயே கஷ்டமான வேலை லீவு விடுவதா வேண்டாமா என்று முடிவெடுப்பது தான்" என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கலகலவென பேசியுள்ளார்.

No comments:

Post a Comment