குறளை உள்வாங்கிய ஆங்கிலேய அதிகாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

குறளை உள்வாங்கிய ஆங்கிலேய அதிகாரி

1818இல் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஆங்கிலேய அதிகாரி எல்லீசன் சென்னையில் வெட்டிய 27 கிணறுகளில் ஒன்று -  ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் கிணறு. அதன் கைப்பிடிச் சுவரில் பதியப்பட்ட கல்வெட்டில் இந்தக் குறள்.

"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு"

திண்டுக்கலிலுள்ள எல்லீஸ் துரையின் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

 "திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி

அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்

தங்கு பல  நூல்  உதாரணக்  கடலைப்  பெய்(து) 

இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்"

நீரின் இன்றியமையாத தேவை பற்றி வள்ளுவரின் கருத்தை எல்லீஸ் நன்கு உணர்ந்ததால் அக்குறளை கிணற்றில் பதிந்துள்ளார்,   இந்த பீகாரி பார்ப்பான்(ஆளுநர்) குறளை தவறாகப் புரிந்த ஆங்கிலேயர் என்று கூறுகிறார்!


No comments:

Post a Comment