வல்லம், நவ. 13- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல் கலைக கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நவம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாள்களில் நடத்திய அறிவியல் கண்காட்சி பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடை பெற்றது.
இதன் நிறைவு விழா 10.11.2022 அன்று பகல் 12 மணியளவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலு சாமி தலைமையில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் எஸ்.இங்கர் சால் (முதுநிலை அறிவியல் அறி ஞர் LPSC/ISRO பெங்களுரூ) கலந்து கொண்டு தமது தொடக் கவுரையில் "இன்று தொழில் புரட்சியில் நான்காம் காலக் கட்டத்தில் உள்ளோம். மனித குல வாழ்வை மேம்படுத்துவது என்பது அடிப்படையான ஒன்று. இயற்கை பாதுகாப்பு, அறிவியல் சிந்தனைகளால் தொழில்நுட் பம் உருவாகி உள்ள இந்த நேரத் தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பழைமையான காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்த சமூகத்திலிருந்து மாறி இன்று நாம் வளர்ந்துள்ளோம். ஏறத் தாழ 160 ஆண்டுகள் தொழில் புரட்சியில் வளம் கண்டு வருகி றோம். முதல் தொழில் புரட்சி தண்ணீர், காற்று, இரண்டாவது தொழில் புரட்சி மின்சாரம், மூன்றாவது தொழில் புரட்சி மின்னணு அறிவியல், நான்கா வது தொழில் புரட்சி இயந்திரத் தின் உதவியோடு மனித வள மேம்பாடுகட்கு மூலக்காரண மாக அமைந்துள்ளன.
இணைய செய்திகள் மூலம் முன்னேற்றம் பெறுவது மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வதுடன் மாணவர்கள் கல்வி மட்டுமல்லாமல், புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
கனவை நனவாக்க வேண்டும்
அறிவியல் கண்காட்சியில் பல் வேறு மாணவர்களின் படைப் பாற்றலை மேம்படுத்தும் நோக் கில் சுமார் 7500 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு மாவட் டங்களிலிருந்து 50 கல்வி நிறுவ னங்களின் மூலம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும் தங்களு டைய 235 குறுந்திட்ட ஆய்வுகள், 1065 போஸ்டர்கள், திட்ட ஆய் வுகளைக் கொண்டவை இக் கண்காட்சியில் இடம் பெற்றன. இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி துணைவேந்தர் "மாண வர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். நவநாகரிக உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். தொழில் புரட்சியில் அறிவியல் முன்னேற்றம் வேண்டும். அறிவியலையும், மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வதைபோல் கனவை நனவாக்க வேண்டும். பெரியாரின் வாழ்வியலை பின் பற்ற வேண்டும்" என்று குறிப் பிட்டார்.
இவ்விழாவில் என்.நூரல் ரிப்பாய (மாணவ அமைப்பு மூன்றாம் ஆண்டு மாணவர்) வரவேற்புரையாற்றினார். அறிவியல் கண்காட்சி ஆய்வறிக் கையை பேராசிரியர் முனைவர் சி.வி.சுப்ரமணியன் வாசித்தளித்தார்.
பரிசளிப்பு
இப்பரிசளிப்பு விழாவில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காட்சிப்படுத்திய சிறந்த படைப் புக்கான பரிசுகள் அரசு மேல் நிலைப்பள்ளி வடசேரி மாண வர்கள் எஸ்.பிரகதீஸ் மற்றும் எஸ். ராகுல், 11ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புக்கு அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி பட்டுக்கோட்டை மாணவர்கள் எஸ்.கிசோர் மற் றும் சிவ.மாரிமுத்து ஆகியோ ருக்கு வழங்கப்பட்டது. கண் காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கல்வி புல முதன்மையர் பேராசிரியர் அ.ஜார்ஜ், தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் வெ.சுகுமார், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் பேராசிரியர் ஆர்.மல்லிகா, பொறியியல் புல முதன்மையர் பேராசிரியர் சி.செந்தமிழ்குமார் மற்றும் முதன்மையர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர் கள் கலந்து கொண்டு விழா வினை சிறப்பித்தனர்.
நிறைவாக இரண்டாம் ஆண்டு மாணவ அமைப்பாளர் எம். ரியாஷ் சுவாமி நன்றியுரை யாற்றினார்.

No comments:
Post a Comment