ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் நான் உண்மையைக் கூறுவேன் - வேண்டுமென்றால் எனது பயணத்தை தடுத்துப் பாருங்கள்: ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் நான் உண்மையைக் கூறுவேன் - வேண்டுமென்றால் எனது பயணத்தை தடுத்துப் பாருங்கள்: ராகுல்காந்தி

மும்பை, நவ. 20- மகாராட்டிர மாநிலத்தில் தனது நடைப் பயணத்தைத் தொடர்ந்து வரும் காங் கிரஸ் மக்களவை உறுப்பி னர் ராகுல் காந்தி, ஹிந்து மகா சபை தலைவர் வி.டி. சாவர்க்கரை விமர்சித் திருந்தார். “பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சிறை யில் இருந்து வெளியே வந்தவர்தான் சாவர்க்கர். பிரிட்டிஷார் தயவில் விடுதலையாகி அவர்களி டமே ஓய்வூதியம் பெற்று வாழ்ந்தவர்” என்று குறிப் பிட்டிருந்தார்.

ராகுலின் இந்தப் பேச் சால் ஆர்எஸ்எஸ் - பாஜக வட்டாரங்கள் கொந் தளித்தன. ராகுல்  மன் னிப்பு கேட்க வேண்டு மென கூப்பாடு போட்ட னர். “ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் பாராமல், வீர சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து இழி வாகப் பேசி வருகிறார். ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் நான் புகார் அளிக்க உள்ளேன்” என்று சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கரும் களத் தில் குதித்தார்.  

இதனிடையே, அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற நடைப் பயணத்திற்கு இடையே ராகுல் காந்தி செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது சாவர்க்கர் மீதான தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.  சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தை ஊட கங்கள் முன்பு எடுத்துக் காட்டிய ராகுல்காந்தி, “உங்களுக்கு மிகவும் கீழ்ப் படிதலுள்ள வேலைக்கா ரனாக இருக்க  நான் கெஞ்சுகிறேன்” என்று கடிதத்தின் கடைசி  வரி யில் குறிப்பிட்டு இருப் பதை படித்துக் காட்டி னார்.

மேலும், “நான் சாவர்க் கரை பற்றி கூறிய கருத் துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள் ளேன். பயம் காரணமாகத்தான் சாவர்க்கர் மன்னிப்புக் கோரி கடிதத்தை எழு தினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது காந்தியார், சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிக ளுக்கு அவர் செய்த துரோகம்” என்று கூறியது டன், “சிலர் (முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான அரசு) எனது  நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டு மென்றால் எனது நடைப் பயணத்தை மகாராஷ் டிரா அரசு நிறுத்தி பார்க் கட்டும்” என்றும் ராகுல் காந்தி சவால் விடுத்தார். 

இதனிடையே, வி.டி. சாவர்க்கர் குறித்து இழி வான முறையில் கருத்து கள் கூறியதாக ராகுல் காந்தி மீது தானே காவல் நிலையத்தில் அய்பிசி 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய் யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்து உள்ளூர் மக்க ளின் மனதை புண்படுத்திவிட்டது என்று பாலா சாஹேப் பாஞ்சி சிவ சேனா பிரமுகர் வந்தனா டோங்ரே என்பவர் கொடுத்த புகாரின் அடிப் படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. மற்றொரு புறத்தில், சாவர்க்கர் குறித்த பேச் சுக்காக ராகுல் காந்திக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment