அப்பிநாயக்கன்பட்டி பார்வதி அம்மாள் படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

அப்பிநாயக்கன்பட்டி பார்வதி அம்மாள் படத்திறப்பு - நினைவேந்தல்

 ஊற்றங்கரை, நவ. 19-- கிருட்டின கிரி மாவட்டம், ஊற்றங்கரை ஒன்றியம், அப்பி நாயக்கன் பட்டி செவத்தான் மனைவியும், ஊற்றங்கரை ஒன்றிய செயலா ளர் செ.சிவராஜ் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு  13.-11.-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட தலைவர் த. அறிவரசன் தலை மையில் நடைபெற்றது. செ.சிவ ராஜ் அனைவரையும் வர வேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட செய லாளர் கா.மாணிக்கம், தருமபுரி மண்டல மகளிர் அணி செய லாளர் மு.இந்திரா காந்தி, மண் டல செயலாளர் பழ. பிரபு, ஒன்றிய தலைவர் செ. பொன் முடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அம்மையார் பார்வதி அவர் களின் படத்தை மாநில அமைப் பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் திறந்து வைத்தார்.

அதன்பின் மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், மேனாள் மண்டல தலைவர்  வெங்கடாசலம், காந்தி, வீரமணி, பர்கூர் ஒன்றிய செய லாளர் மு.ரகுநாதன், மாநில கலைத்துறை செயலாளர்  மாரி. கருணாநிதி,  மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா சரவணன், மாநில அமைப்பு செயலா ளர்கள் ஊமை.ஜெயராமன், பன்னீர்செல்வம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

மாநில அமைப்பாளர் ஒரத்த நாடு இரா.குணசேகரன் நினைவேந்தல் சிறப்புரையாற் றினார்.

அதில் அம்மையார் பார் வதி அவர்களின் சிறப்பையும், அவரின் மகனான ஒன்றிய செயலாளர் செ. சிவராஜின் கொள்கை உறுதி பற்றியும், அவரின் தாயார் இறப்பில் கொள்கை முறைப் படி எந்த விதமான மூடச் சடங்குகளும் இன்றி பெண் களே பாடை சுமந்து சென்று அடக்கம் செய்ததையும்,  இறப்பு இறுதிநிகழ்வுக்கு எந்த வித இடையூறும் செய்யாமல் ஒத்துழைப்பு நல்கிய அவரது உறவினர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் கழகத்தின் சார்பில் நன்றி கூறியும் நினை வேந்தல் உரையாற்றினார்.

பங்கேற்றோர்:

மண்டல இளைஞரணி செயலாளர் மு.சிலம்பரசன், ஆசிரியர் பழனி, மத்தூர் ஒன் றிய துணைத் தலைவர் தனஞ்ஜெயன், மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் அருள், மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் மா.வித்யா, திருப்பத்தூர் கழகத் தோழர்கள் திருப்பதி, சிவக்குமார், ராமசாமி, ராஜேந் திரன், செந்தில், வசந்தா, சந் திரா, ஆறுமுகம், கார்த்திக், முருகேசன், செம்மொழி, இசை மொழி, வசந்தமல்லி, காரல் மார்க்ஸ், பூங்கொடி, ராஜி, மலர்விழி, ஆதுகேசன், அகிலாண்டேஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணைச் செய லாளர் ஆ.கோ.ராஜா மற்றும் கழகத் தோழர்களும், ஊர் பொதுமக்களும் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் உணவு  வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment