பிஜேபியின் தேர்தல் திருகு தாளம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

பிஜேபியின் தேர்தல் திருகு தாளம்!

பா.ஜனதாவில் இணையுமாறு என்னை அணுகினார்கள்

முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

அய்தராபாத், நவ. 19- பா.ஜனதாவில் இணையுமாறு தன்னை அந்த கட்சியின் நண்பர்கள் அணுகியதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா குற்றச்சாட்டை கூறியுள்ளார். 

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள் ளது. இந்த கட்சியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசிய தாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி  சில அடையாளம் தெரியாத  நபர்கள் அணுகியதாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் கூறினர். இந்த விவகாரத்தில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழு வதும் பெரும் பரபரப்பை ஏற் படுத்திய இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது. இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று (18.11.2022) அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

முன்னதாக, இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் அலைபேசியல் பேசியதாக பா. ஜனதா நாடாளுமன்ற உறுப் பினர் தர்மபுரி அரவிந்த் கூறியிருந் தார். இதை மறுக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறு கையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன் வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார். எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்து மாறு பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

மராட்டியத்தில் சிவசேனா சார்பில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங் கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டு தனது ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களுடன் பா.ஜன தாவுடன் கைகோர்த்து தற்போது முதலமைச்சராகி இருப்பது குறிப் பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மகளின் இந்த குற்றச் சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment