செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

செய்தியும், சிந்தனையும்....!

தீர்மானிப்பார்களா?

ஹிந்தி, உருது, அரபி உள்பட 13 மொழிகளில் திருக்குறளை காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

>> கருத்துச் சிதையாமல் - திரிபு வேலைக்கு இடமில்லாமல் வெளியிடப்படுகிறதா என்பது முக்கியமான ஒன்று; அதைவிட பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்று, ஹிந்து மதத்தில் உள்ள பிறப்பின் அடிப்படையிலான ஜாதியை ஒழிக்க காசி சங்கமத்தில் முடிவு எடுப்பார்களா என்பது முக்கிய கேள்வி.

என்ன தண்டனை மோடிஜி?

உலகம் முழுவதும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்குத் தண்டனை!

- டில்லி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 

>> ஒரே நாடு, ஒரே மதம் (ஹிந்து), இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஹிந்துக்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்களுக்கு என்ன தண்டனை பிரதமர் மோடிஜி?


No comments:

Post a Comment