தொல் மரபியல் ஆய்வகம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

தொல் மரபியல் ஆய்வகம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

மதுரை, நவ. 19- மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் ரூ. 3.3 கோடி மதிப் பில் அமைக்கப்பட்டுள்ள தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி உதவி யுடன் தொல் மரபியல் ஆய்வகம், நுண் உயிரியல் ஆய்வகம் தொடக்க விழா 17.11.2022 அன்று நடந்தது. பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரி யர் குமார் தலைமை வகித் தார். பல்கலை பதிவாளர் சிவகுமார் வரவேற்றார். 

ஆய்வகங்களை தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடி. பழனிவேல் தியாக ராஜன் திறந்து வைத்து பேசினார்.

அதில், "பண்டைய பழைமையை அறிய மிக உயரிய ஆய்வகம் அமைத்த பல்கலைகழகத்திற்கு வாழ்த்துக்கள்.

எனது தாத்தா பிடி ராஜன் மற்றும் மாமா பக்தவச்சலம் சென்னை மாகாண முதல்வராக இருந்து, இந்த நிறுவனத் திற்கு பங்கற்றியுள்ளனர். உயரியல், நுண் உயிரியல் படிப்புகளின் ஆய்வகத் தின் மூலம் பண்டைய கலாச்சார, பொருளா தார ,வாழ்வு நிலை விளக் கும். ஆய்வுகள் மற்றும் பழைய மரபுகளை புதிய தலைமுறைக்கு எடுத்து ரைக்கும் ஆராய்ச்சி களில் இன்றைய நிலவரம், பாடநூல்கள் மூலம் வர லாற்றில் இடம் பெறும். இந்த ஆய்வகத்தின் மூலம் பண்டைய மனிதன், விலங் குகள், தாவர மரபணுக் களை பகுப்பாய்வு செய் யலாம்.

பண்டைய நுண் உயி ரியல் துகள்களை ஆய்வு செய்யலாம். கோவிட் 19 போன்ற நோய்களுக்கு ஆய்வின் மூலம் புதிய மருந்துகள் கண்டு பிடிக்க வும், நவீன நுண் உயிரியல் ஆய்வக வசதி உள்ளது. ஆய்வகம் மற்றும் பகுப் பாய்வு முடிவுகள், கலந் தாய்வு வசதிகளுக்காக சிகாகோ பல்கலைக்கழ கம், லக்னோ பீர்பால் சஹானி பல்கலை கழகத் துடன் இணைந்து காம ராஜர் பல்கலை ஆய்வு மேற்கொள்ளும். இவ் வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment