ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மன்னர் கால கட்ட பஞ்சாயத்துகளை கற்றுத் தர வேண்டும் என்று கூறிய யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வி.சி.க. தலைவர் தொல்.மாவளவன் ஒன்றிய அரசுக்கு கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆண்டுக்கு ரூ. 7,99,999 வரையிலான மொத்த வரு மானம் உள்ள குடும்பம் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் (ணிகீஷி) இட ஒதுக்கீட்டின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான வருமான அளவுகோல்களை அரசு நிர்ணயித்க்கும் போது, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர் கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறும் நிதிச் சட்டம் 2022இன் ஒரு பகுதியை ‘அல்ட்ரா வைரஸாக’ அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கீது அனுப்பியுள்ளது.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment