ஓவியர் சிவகாசி மணியம் மறைவு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

ஓவியர் சிவகாசி மணியம் மறைவு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

விருதுநகர், நவ.13 விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினர், மொழிக் காவலர், ஓவியர் சிவ காசி மணியம் அவர்கள் (வயது 90) கடந்த 9.11.2022 அன்றிரவு 7 மணியளவில் இறுதி எய்தினார். 

செய்தி அறிந்து கழகப் பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி, நகர கழகத் தலைவர் மா.முருகன், அமைப் பாளர் பெ.கண்ணன், செயலாளர் து.நர சிம்மராஜ்,  திருத்தங்கல் நகர கழக அமைப்பாளர் மா.நல்லவன், மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் ச.சுந்தர மூர்த்தி மற்றும் தோழர்கள் சிவகாசி ரிசர்வ் லைன் ஈரோடு இல்லம் சென்று, மணியம் அவர்களது உடலுக்கு கழகக் கொடி போர்த்தி, மலர் மாலை அணி வித்து இறுதிமரியாதை செலுத்தினர். 

10.11.2022 வியாழன் காலை 9 மணி யளவில், மாவட்ட கழகத் தலைவர் இல.திருப்பதி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி,, மண்டல கழக இளைஞரணி செயலாளர் இரா.அழகர், மீட்சி இதழாசிரியர் குறிஞ்சிக்கபிலர், பாவாணர் கோட்டம் ஆ.நெடுஞ்சேர லாதன், அருப்புக்கோட்டை நகர ப.க. செயலாளர் பூ.பத்மநாதன் மற்றும் சிவகாசி தோழர்கள், அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். 

முற்பகல் 11 மணியளவில், மணியம் அவர்களது இணையர் வெற்றிச் செல்வி, மகன்கள் வள்ளுவன், கவுத மன், காஞ்சித்தலைவன் மற்றும் உறவி னர்கள் ஒத்துழைப்புடன், தோழர்களது வீரவணக்க முழக்கத்துடன், மணியம் அவர்களது இறுதிப் பயணம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி நோக்கிப் புறப்பட்டது.

மதியம் 12 மணியளவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மணியம் அவர்களது உடல் உரிய ஆவணங் களுடன் ஒப்படைக்கப்பட்டது.

உடலைப் பெற்றுக் கொண்ட மருத் துவக் கல்லூரி பொறுப்பாளர்கள் உடற் கொடைக்கான சான்றிதழ் வழங்கி, மணியம் அவர்களது குடும்பத்தாருக் கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment