செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

செய்திச் சுருக்கம்

தொழில் பழகுநருக்கு...

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில் மெக்கானிக் குகள், ஆடடோமொபைல் பிரிவில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி யில் சேர இணையவழியில் டிச.18ஆம் தேதிக்குள் ஷ்ஷ்ஷ்.தீஷீணீt.sக்ஷீஜீ.நீஷீனீ இல் அணுகலாம்.

கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட 148 கன அடி கிருஷ்ணா நீர் நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தது.

மின் இணைப்பு

கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஓராண்டுக்கு 2,000 மின் இணைப்புகளை தட்கல் திட்டத்தில வழங்க மின் வாரியம் உத்தரவு.

மீட்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேசியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் சென்னை வந்தனர்.

பயிற்சி

தமிழ்நாட்டில் சென்னை பெருநகராட்சி உள்பட  21 மாநகராட்சிகளின் சென்னை, வேலூர் உள்ளிட்ட அனைத்து பெண் மேயர்களுக்கும் இன்று தொடங்கி 24ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீக்கம்

அடுத்த சில மாதங்களுக்கு ரயில்களில் ஏசி 3-இ வகுப்பு இருக்காது. 3-இ பொருளாதார வகுப்பு ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும் இந்தப் பணி 4 மாதங்களில் முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல்!

விண்ணில்

புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் 8 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-54 ராக்கெட்டை வரும் 26ஆம் தேதி விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ திட்டம்.


No comments:

Post a Comment